பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப் பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் | 3 "கன்னலும் தேனும் கனியும் இன்பாலும் கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும் உன்னத ஆரிய நாடெங்கள் நாடே" என்று நாட்டின் சிறப்பைக் குறிப்பிடுகிறார். H "நாட்டைத்துயர் இன்றி நன்கமைத்திடுவதும் உளமெனும் நாட்டை ஒரு பிழையின்றி ஆள்வதும் போராளி ஞாயிறேயனைய சுடர்தரு மதியொரு துயரின்றி வாழ்தலும் நோக்கமாகக் கொண்டு நின்பதம் நோக்கினேன்" என்று பாரதி விநாயகரை வேண்டுகிறார். இன்னும் H மண் மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு மரங்கள், யாவும்என்வினையில் இடும்பை தீர்ந்தே இன்பமுற்று அன்புடன் இளங்கி வாழந்திடவே செய்தல் வேண்டும்" என்றும் 'பூமண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக, துன்பமும் மிடிமையும் நோவும் சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம் இன்புற்று வாழ்க என்பேன் பான்றும் விநாயகர் நான்மணி மாலையில் குறிப்பிடுகிறார். மனித சமுதாயம் மட் டு மல்ல, உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நல் வாழ்வு பெறவேண்டும், இயற்கை சக்திகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும். மனிதனுக்கும் இதர உயிர்ப்பொருள்களுக்கும் இயற்கை சக்திகளுக்கும் இ ையில்நல்லுறவு அமைய வேண்டும் என்பது இந்திய சாத்திரங்களின் பொதுக் கொள்கையாகும். இது இந்திய சாத்திரங்களுக்கே உரிய தளித்தன்மையாகும். இதை பாரதியும் தனது கவிதைகளில் தெளிவாகப்பல இ ங்களிலும்பேசுவதைக் காணலாம். புதுவினை காட்டவும், மதியினை வளர்க்கவும் இச்சை, கிரியை, ானம், ஆகியவற்றை ஆக்கவும் வளர்க்கவும் விநாயகரைப் பாரதி ஃ:ே சமுதாய வளர்ச்சிக்கு இவை ஆதாரமாகும். இச்சையென்றால் எந்த ஒரு காரியத்தைச் செய்வதற்கும் ஒரு எண்ணம். ஒர் ஆசை, ஆவல் துண்டுதல் ஒரு விருப்பம் வேண்டும். அதை அடுத்து கிரியை - செயல் நிகழ்கிறது. அதாவது செயல்பாடு, எண்ணத்தை நிறைவேற்றல் நிகழுகிறது. முதிர்ச்சி பெற்று அடுத்தகட்ட வளர்ச்சிக்குப் பயன்படுகிறது. இக்கருத்துக்கள் இந்தியப் பண்பாட்டின் ஆதாரங்களில் ஒன்றாகும். முருகளை வேண்டும் பொது "தருவாய் தொழிலும் பயனும்" என்றும் " என்றும் கேடற்ற வாழ்வினைத்தருவாய்" என்றும், "நீறுபடக் கொடும்பாவம், பிணி, பசி, யாவையும் இங்கு நீக்குவாய்" என்றும் பாரதி கூறுவதைக் காண்கிறோம்.