பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் I 5 ான்று மிகவும் அற்புதமான முறையில் பாரதி வாழ்வியலை சக்தி .யோடினைத்துப்பாடுகிறார். "திருவேட்கை" என்னும் பாடலில் "செல்வம் எட்டும் எய்தி - நின்னால் செம்மையேறி வாழ்வேன் இல்லையென்ற கொடுமை - உலகில் இல்லையாக வைப்பேன்" ான்று பாடுகிறார். "திருமகள் துதி" என்னும் பாடலில், "அன்னம் நறுநெய்பாலும் அதிசயமாய்த் தருவாய்" "ஆடுகளும் மாடுகளும் அழகுடைய பரியும் வீடுகளும் நெடுநிலமும் விரைவினிலே தருவாய் "நாடு மணிச்செல்வம் எல்லாம் நன்கருள்வாய்" என்றெல்லாம் பாடுகிறார். "செல்வங்கள் பொங்கிவரும் - நல்ல தெள்ளறி வெய்திரு நலம்பல சார்ந்திடும்" ான்றும், "மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் வலியுண்டு தீமையைப் போக்கும் விதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு" wwwrnqub, "பொருளிலார் பொருள் செய்தல் முதல் கடன்" என்றும், பலவகையாக மனித வாழ்க்கைக்கு உலக வாழ்க்க்ைகு அவசியமான பண்புகளையும் கடமைகளையும் பாரதி எடுத்துக் கூறுவதையும் காண்கிறோம். பொது நெறியில் புதுநெறி தெய்வப் பாடல்களில் வாழ்க்கைத் தேவைகளைக் கேட்டு தெய்வங்களை வேண்டுவது பாரததின் பண்பாட்டு வழியிலாகும். அதே சமயத்தில் அக்கருத்துக்களில் பாரதி காலத்திற்கேற்ற புது நெறிகளையும் காட்டுகிறான்.