பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் | 7 "முயலும் வினைகள் செழிக்கும்" எனவும், "கலியை நான் கொன்று. பலோகத்தார் கண்முன்னே, மெய்க்கும் கிருதயுகத்தினையே கொணர்வேன்" என்றும், " புதுவினை காட்டும் புண்ணியா, மதியினை வளர்க்கும் மன்னே". என்றும் " பாரிடை மக்களே, கிருதயுகத்தினைக் கேடின்றி நிறுத்த விரதம் நான் கொண் னன்" என்றும், நமது நாட்டின் பண்பாட்டு தளத்தில் நின்றுபாரதி புது நெறி வகுத்து நமக்கு புது வழி காட்டி நாட்டு மரபிற்குப் புதிய அறிவுச் செல்வத்தைச் சேர்க்கிறான். கலிவிழ்ந்து கிருதயுகம் வரவேண்டும் ான்று. பொய்யும் அடிமையும் அச்சமும் நீங்கி, சத்தியமும் விழிப்பும், விடுதலையும் பெற்று பாரத சமுதாயம் முதன்மை பெறவேண்டும் என்று கூறுகிறார். "செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி சேர்ந்திட நல்லருள் செய்கவென்றே பூதங்கள் ஐந்தில் இருந்தெங்கும் கண்ணில் புலப்படும் சக்தியைப் போற்றுகின்றோம் வேதங்கள் சொன்னபடிக் மனிதரை மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே வேகம், கவர்ச்சி முதலிய பல்வினை மேலிடும் சக்தியை மேவுகின்றோம். உயிரெனத் தோன்றி உணவு கொண்டே வளர்ந்தோங்கிடும் சக்தியை ஒதுகின்றோம். இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும் எடிக்குத் தெரிந்திடல் வேண்டுமென்றே மாறுதல் இன்றிப் பராசக்தி தன்புகழ் வையமிசை நித்தம் பாடுகின்றோம் நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர் நோக்கங்கள் பெற்றிட வேண்டுமென்றே ஓம் சக்தி, ஓம் சததி, ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி என்றுரை செய்திடுவோம்" வறு பாரதி இந்து தர்மக் கடமையின் இந்து தர்ம நோக்கத்தின், குறிக்கோள் களின் சாரத்தைத் தன் சக்தி வழிபாட்டின் மூலம் எடுத்துக் கூறுகிறார். பாரதி சக்தியை மாயையாகக் காணவில்லை. மகா சக்தியாகக் காண்கிறார். இன்னும் மாயை என்னும் சொல்லை வைத்து நமது நாட்டில் ா பாவாதம் என்னும் ஒரு தத்துவம் எழுந்தது. உலகமே பொய் என்றும், "காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா" என்னும் கருத்து வாதம்