பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 20 "ஒப்பிலாத உயர்வொடு கல்வியும் எய்ப்பில்வீரமும் இப்பு வியாட்சியும் தப்பிலாத தர்மமும் கொண்டுயாம் அப்பனே நின் அடிபணிந்துய்வமால் மற்று நீயிந்த வாழ்வு மறுப்பையேல் "சற்று நேரத்துள் எம்முயிர்சாய்த்தருள் கொற்றவா! நின் குவலயம் மீதினில் வெற்று வாழ்க்கை விரும்பியழிகிலோம். நின்றன்மாமரபில் வந்து நீசராய்ப் பொன்றல் வேண்டிலம் பொற்கழல் ஆணைகாண் இன்று இங்கு எம்மை அதம்புரி இல்லையேல் வென்றியும் புகழும் தரல் வேண்டுமே!! என்று கண்ணன் மாரபிலே வந்த பாரதி கண்ணனை வேண்டிப்பாடுகிறார். குலதர்மம்

  1. இந்து பண்பாட்டு தளத்தில் ஒன்றாக சாதி அமைப்பு இன்று இந்திய சமுதாயத்தில் நிலை கொண்டிருக்கிறது. சாதி அமைப்பு இந்திய சமுதாயத்தில் தோன்றி வளர்ந்து நிலைபெற்ற வரலாறு பற்றி பல ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. எல்லா ஆய்வுகளும் இந்திய சமுதாயத்தின் பன்முகத்தன்மைகளையும் முன்வைத்துப் பேசியிருக்கின்றன. இந்து தர்ம சாத்திரங்கள் பலவும் நான்கு வர்ணங்களைப் பற்றியும் அவைகளின் தனிதர்மங்கள் பற்றியும் விவரித்துக் கூறுகின்றன. அவைகளைக் குலதர்மங்கள் என்று விவரித்துக் கூறுகின்றன.

வேதங்கள் நான்கும் முதல்முதலில் தோன்றிய சாத்திரங்களாகும். அவ்வேதங்கங்களில் நான்கு வர்ணங்களைப் பற்றியோ குலங்களைப் பற்றியோ, குல தர்மங்களைப்பற்றியோ குறிப்புக்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பின்னர் வந்த உபநிடதங்களில்குலங்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. அதன் பின்னர் வந்துள்ள ஸ்மிருதிகள் குலங்களைப் பற்றியும் குல தர்மங்களைப்பற்றியும் குறிப்பிட்டு கூறுகின்றன. மனு ஸ்மிருதி தான் வர்ணங்கள், குலங்கள், குல தர்மங்கள் பற்றி கட்டுக்கோப்பான கருத்துக்களையும் விதிமுறைகளையும் வகுத்துள்ளது. குலங்களின் தோற்றங்கள் வளர்ச்சிகள் பற்றிய ஆராய்ச்சிகள் பலவகையாக இருப்பினும் பிறப்பி ன்அடிப்படையில் எவ்வாறு குலங்கள் (சாதிகள்) நிலைகொண்டன, இந்தக்குலங்களுக்கிடையில் எவ்வாறு பாகுபாடுகளும் வேறுபாடுகளும் தோற்றுவிக்கப்பட்டன, என்பதும் மேலும் விரிவான ஆய்வுக்குறியனவாகும். இந்த சாதிப்பிரச்சினையால் பாரத சமுதாயத்திற்கு ஏற்பட்ட தீங்குகளும் கேடுகளும் சீரழிவுகளும் கோரமான கொடுமைகளும் கொஞ்சம் அல்ல.