பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 23 பெற்றிருப்பதும், அந்த சாதி அமைப்பு மூலம், சாதி வேறுபாடுகளும் பாகுபாடுகளும் கொடுமைகளும் சமுதாயப் பழக்கத்தில் கொண்டு வரப்பட்டதும் இந்த நாட்டின் சமுதாய வளர்ச்சியின் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான தீர்க்கப்பட வேண்டிய சமூக நீதிபற்றிய பிரச்சனையாகும். மறுபக்கத்தில் இந்த சாதிப்பாகுபாடுகள் வேறுபாடுகள் கொடுமைகளை இந்திய சமுதாயம் அடிபணிந்து ஏற்றுக்கொணடதுமில்லை. இந்தக் கொடுமைகள் என்று தோன்றினவோ அன்று முதல் இவைகளுக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்களும் அவை தொடர்பான கருத்துக்களும் நிகழ்ச்சிகளும் நமது பண்பாட்டு தள்த்தில் ஒரு முக்கிய பற்றுக்கோடாகும். சாதிக் கொடுமைகளை எதிர்த்து தொடர்ச்சியாக நடைபெற்றுள்ள போராட்டங்களின் வரலாற்று அனுபவங்களைத் தெளிவாக ஆய்வு செய்து அவைகளின் படிப்பினைகளைக் கைக் கொள்ள வேண்டியதும் மிக முக்கியமான பணியாகும். வேதங்கள், உபநிடதங்கள், சுருதிகள், ஸ்மிருதிகள், புராணங்கள் இதிகாசங்கள், முதலிய சாத்திரங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் நிகழ்ச்சிகள், புத்தம் சமணம் உருவாக்கிய சங்கம், அறப்பள்ளிகள், சர்வ ஜனசமத்துக் கொள்கை, இடைக்காலக் காப்பியங்கள் வெளியிட்ட கருத்துக்கள் நிகழ்ச்சிகள், குலதர்மங்களைப் பற்றி பகவத்கீதையில் பகவான் கூறியுள்ள அடிப்படைக்கருத்துக்கள், பின்னர் தோன்றிய கீதையின் பாஷ்யங்கள், பக்தி இயக்கங்கள், அவை அனைத்து பகுதி மக்களையும் ஈடுபடுத்திய சமுதாய நீரோட்டப் பெருவெள்ளங்கள், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயத்தாக்கங்கள், ஐரோப்பிய மறுமலர்ச்சி இயக்கங்களின் தலையீடுகள், நமது நாட்டில் சற்று முந்திய நூற்றாண்டுகளில் தோன்றி வளர்ந்த சமூக சீர்த்திருத்த இயக்கங்கள், தேசீய விடுதலை இயக்கம், அடிப்படை மக்களின் சமுதாயப் பொருளாதார அரசியல் கிளர்ச்சிகள், ஆகியவற்றின் தொடர்ச்சியாக பாரதி தனது கருத்துக்களை, கருத்தாழம் மிக்க கவிதைகளை மிகவும் தெளிவாகக் கூறியிருப்பதைக் காணலாம். பாரதி தனது நாட்டுப்பாடல்களில், "சாதி மதங்களைப் பாரோம் - உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதியராயினும் ஒன்றே - இன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே" வனவும், " ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே" என்று அனைத்து மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும்,