பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 26 வேற்று மையும் பார்க்கக் கூடாது என்பது மட்டுமேயன்றி எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்வித வேற்றுமையும் பாராதிருத்தலே ஞானிகளுக்கு லட்சணமென்று சொல்லுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். சாத்திரங்களின் மூல நூல்களில் உள்ள கருத்துக்களுக்கு மாறாக சாதி வேறுபாடுகள், பாகுபாடுகள், கொடுமைகள், இழிவுகள், தீண்டாமை முதலிய கொடுமைகள், சமுதாயத்தின் மேல்தட்டில் இருந்த சில பிரிவுகளின் சுயநலம் காரணமாக ஏற்பட்டன என்பதும் அதற்காகப் பொய்மைச் சாத்திரங்கள் பல தோன்றின என்பதையும் பாரதி தனது பாடல்களில் பல இடங்களிலும் குறிப்பிட்டுக்காட்டுகிறார். பாரத சமுதாயத்தின் அனைத்து பகுதி மக்களுடைய முழுமையான விடுதலைக்காக பாரதி சிந்தனைகள் வெளிப்பட்டுள்ளதைக் காண்கிறோம். H பெண்ணின் மேன்மையும் பெருமையும் பற்றி: மிகப்பண்டைய காலத்தில் பெண்ணிற்கு சமுதாயத்தில் பெருமையும் மேன்மையும் தலைமையும் இருந்தது. தாய்வழி சமுதாயமே மனித குலத்தின் தொடக்கமாகும். பாரத மக்கள் பெண்ணிற்கு தெய்வீகத்தன்மையைக் கொடுத்துக் கொண்டாடினர். சமுதாயத்தின் இரு கண்களாக பெண்ணும் ஆணும் கருதப்பட்டனர். இடைக்காலத்தில் ஆதிக்கத்தில் இருந்தவர்கள் பெண்ணைத் தாழ்த்திவிட்டனர். பெண் அடிமைபோல் ஆக்கப்பட்டாள். பெண்களும் சூத்திரர்களும் வேதங்களையும் நூல்களையும் படிக்கலாகாது என்று சில பொய்மைச்சாத்திரங்களில் எழுதிவைத்தார்கள். வேறு சில பகுதிகளிலும் பெண்பாற் புலவர்கள் பலரும் தோன்றி"ஒதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்" என்னும் மகாவாக்கியத்தைக் கூறிய புண்ணிய பூமியாக இருந்தது. பிற் காலத் தி ல் பெண்கள் மேலும் அடிமை ப்டுத்தப் பட்டு. பிற்படுத்தப்பட்டனர். பின்னுக்குத் தள்ளப்பட்டனர். தற்காலத்தில் பெண் குலத்தில் பெரிய அளவில் எழுச்சி ஏற்பட்டு வருகின்றன. பெண்ணுரிமை இயக்கம், புதுமைப் பெண் இயக்கம் முதலியன பெருகி வருகின்றன. சகல துறைகளிலும் பெண்களுக்கு சமவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்னும் உணர்வு நிலை, விழிப்புணர்வு பெருகி வருகிறது. புதுமைப் பெண் இயக்கத்தின் முன்னோடியாக பாரதி விளங்குகிறார், அவருடைய கவிதைகளும் எழுத்துக்களும் விளங்குகின்றன. பாரத நாட்டின் பண்பாட்டு வழியில் பாரதி, பெண்ணைத் தெய்வமாகப் பாராட்டுகிறார். பெண்ணை சக்தியின் வடிவமாகக் காண்கிறார். நாட்டைப் பெண்ணாக வடித்து தனது கவிதைகளைத் தொகுத்துள்ளார். வந்தே மாதரகீதத்தை அந்த முறையில் பாரதி பெருமையுட ன் பாடுகிறார். "வந்தே மாதரம் என்போம்-எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்"