பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 30 பெண் விடுதலை 幫 பாரதி அறுபத்தாறு' என்னும் கவிதைத் தொகுப்பில் பாரதி பெண் விடுதலையைப் பற்றிப் பேசுகிறார். பெண் விடுதலையைப் பற்றி ஒரு புதிய கொள்கையை வகுத்துக் கூறுகிறார். "பெண்ணுக்கு விடுதலையென்றிங்கோர் நீதி பிறப்பித்தேன் அதற்குரிய பெற்றிகேளிர்" என்று தொடங்கி "மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வமென்றால், மனையாளும் தெய்வ மன்றோ" என்று ஒரு கேள்வியை எழுப் பி 'பெண்ணுக்கு விடுதலை. நீரில் லையென்றால் பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை' என்று ஒரு முடிவு கூறுகிறார். மேலும் " பெண் டாட் டி த ன் ைன அ டி ைம ப் படுத் த வேண்டிப் பெண்குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ? என்றும், உண்டாக்கிப்பாலூட்டி வளர்த்த தாயை உமையவள் என்று அறியிரோ' என்றும் கேட்டு, " பண்டாய்ச்சி ஒளவை - அன்னையும் பிதாவும் பாரிடை முன்னறிதெய்வம் என்றாளன்றோ" என்றும்சுட்டிக்காட்டுகிறார். "தாய்க்கு மேல் இங்கேயோர் தெய்வமுண்டோ தாய் பெண்னேல்லளோ, தமக்கை தங்கை வாய்க்கும் பெண் மகவெல்லாம் பெண்ணேயன்றோ? மனைவியொருத்தியை அடிமைப்படுத்த வேண்டித் தாய்க்குலத்தை முழுதடிமைப்படுத்தலாமோ? தாயைப் போலே பிள்ளை யென்று முன்னோர் வாக்குளதன்றோ? பெண்மை அடிமையுற்றால் மக்கள் எல்லாம் அடிமையுறல் வியப்பொன்றாமோ? என்றும், "ஆதி சக்திதனையுடம்பில் அரசனும் கோத்தான் அயன்வாணி தன்னை நாவில் அமர்த்திக் கொண்டான் சோதி மணி முகத்தினளைச் செல்வமெல்லாம் === சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில் மாதவனும் ஏந்தினான், வானோர்க்கேனும் மாதரின்பம் போல் பிறிதோர் இன்பமுண்டோ? காதல் செய்யும் மனைவியே சக்தி, கண்டிர் கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்" என்றும் கூறி பெண்மையைக் கடவுள் நிலைக்கு உயர்த்தி நமது நாட்டு மரபு வழியில் பெண்விடுதலையை பாரதி வலியுறுத்துகிறார்.