பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 31 "பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான். புவி பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல - F - மாதர் அறிவைக் கெடுத்தார். * <て > "கண்கள் இரண்டில் ஒன்றைக் - குத்திக் s ; : 38?& o காட்சிகொடுத்திடலாமோ * , * . . . _ பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம் o, *- - o / பேதமையற்றிடும் காணிர்" பெண்ணுரிமைபற்றியும் பெண்விடுதலை பற்றியும் உலகில் தற்காலத்தில் சில வகைக் கருத்துக்கள் எழுந்துள்ளன. பொதுவாக மேல் நாடுகளில் பெண்கள் சுதந்திரமாக உள்ளார்கள் என்றும் இந்தியா போன்ற கிழக்கு நாடுகளில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் புெலப்படுகிறது. மேல்நாடுகளில் நிலவுவது காதல் விடுதலைதான். பெண் விடுதலையல்ல என்பது எமதுகருத்தாகும். பாரதி கூறுவதைக் காண்போம். "காதலிலே விடுதலை யென்றாங்கோர் கொள்கை கடுகிவளர்ந்திடும் என்பார் யூரோப்பாவில் மாதரெல்லாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர் பேதமின்றிமிருகங்கள் கலத்தல்போல பிரியம்வந்தால் கலந்து அன்பு பிரிந்துவிட்டால் வேதனையொன்றில்லாதே பிரிந்து சென்று வேறொருவன்றனைக் கூடவேண்டுமென்பார் விரமிலாமனிதர் சொலும் வார்த்தைகண்டீர் விடுதலையாம் காதலெனில் பொய்மைக் காதல்" என்று கூறுகிறார். காதலில் விடுதலையென்றால் அதுபொய்மைக்காதலாகும். அது மனிதனை மிருக நிலைக்குத்தள்ளிவிடும். இத்தகைய பொய்மைக்காதல் யூரோப்பாவில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் உள்ளனவேயாகும். சில இ| ங்களில் வெளிப்படையாகவும், சில இடங்களில் மறைமுகமாகவும், சில இ ங்களில் பட்டும் படாமல் இலைமறைவு காயாகவும் நிலவுகின்றன. alaவே. அதைப் பொய்மை என்றும் போலி என்றும் பாரதி கூற முனைந்தார்.