பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 32 மனிதன் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி தனிமனிதனல்ல. சமுதாயத்துடனும் குடும்ப அமைப்புடனும் இணைந்தவராகும். சமுதாயத்தின் அங்கமாக இருந்து தொழில் செய்தும், குடும்பத்தின் அங்கமாக இருந்து வாழ்க்கை நடத்தியும் ஆனும் பெண்ணும் சரி சமமாக இருந்து தங்கள் கடமைகளை ஆற்றி சமுதாய முன்னேற்றத்திலும் குடும்பவளர்ச்சியிலும் பங்கு கொள்ள வேண்டும். பாரதி இந்தியப் பண்பாட்டின் வழியில் நின்று இதுபற்றி ஒரு புதிய கருத்தைத் தெளிவு படக் கூறுகிறார். இந்த இடத்தில் பால் ஒழுக்கத்தைப் பற்றி கம்பன் காட்டும் ஒரு அருமையான காட்சியை இங்கு நினைவு கூறலாம். இராமன் வாலி மீது மறைந்து நின்று அம்பெய்து வாலி வீழ்ந்து கிடக்கிறான். அப்போது வாலி தன்மீது அம்பெய்தக் காரணம் கேட்டு இராமனுடன் பேசுகிறான். அந்த உரையாடல் ஒரு அற்புதமாகக் காட்சியாகும். இராமன் வாலியிடம் கூறுகிறான் "மறம் திறம்பல, வலியன் எனாமனம் புறம் திறம்ப எளியவர் பொங்குதல் அறம் திறம்பல் அரும்கடி மங்கையர் திறம்திறம்பல், தெளிவுடையோர்க்கெலாம்", என்றும், "தருமம் இன்னது எனும் தகைத்தன்மையும் இருமையும் தெரிந்து எண்ணலை, எண்ணினால் இருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப் பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ?" என்றும் கேட்கிறாான். அதற்கு வாலி "ஐய! நுங்கள் அரும்குலக்கற்பின்அப் பொய்யில் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சி போல் செய்திலன், எமைதேமலர் மேலவன், எய்தின் எய்தியதாக இயற்றினான்" என்றும் "மனமும் இல்லை மறைநெறிவந்தன, குணமும் இல்லைக் குல முதற்கு ஒத்தன. உணர்வு சென்றுழி செல்லும் ஒழுக்கலால் நினமும் நெய்யும் இணங்கிய நேமியாய்"