பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--

  • பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 34

"நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர் நேர்மை கொண்டு உயர்தேவர்கள் ஆதற்கே சிறிய தொண்டுகள்தீர்த்தடிமைச் சுருள் தீயிலிட்டுப் பொசுக்கிடவேண்டுமாம்" என்றும் பெண்ணுரிமைக்கு எதிரானவர்களைக் சாடுகிறார். புதுமைப் பெண்ணின் சொற்கள் எல்லாம் இக்கலிகாலத்திற்கு வேண்டுமானால் புதிதாகத் தோன்றலாம். பண்டய நாளில் பெண்கள் உரிமையுடன் இருந்தனர் என்னும் கருத்தில், "புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்மை கண்ட கலிக்கும் புதிதன்றிச் சதுமறைப்படி மாந்தர் இருந்த நாள் தன்னிலே பொதுவான வழக்கமாம்" "மாதவப் பெரியோருடன் ஒப்புற்றே முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய முறைமை மாறிடக் கேடுவிளைந்ததாம்" என்று பிற்காலத்தில் ஏற்பட்ட கொடுமைகளைச் சுட்டிக்காட்டுகிறார். "ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாாம் பூணும் நல்லறத் தோடிங்கு பெண்ணுருப் போந்து நிற்பது தாய் சிவசக்தியாம் நானும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம் ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம் பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டிரோ" என்று பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகளைப்பற்றி குறிப்பிடுகிறார் "நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மைமாதர் திறம்புவதில்லையாம் அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில் அவலமெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம் உதய கன்னி உரைப்பதைக் கேட்டீரோ" என்று புதிய பெண் பேசுவதைக் கூறுகிறார்.