பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 37 என்று பாரத நாடு உலகிலேயே ஒரு இணையற்ற நாடாக பாரதிக்குக் காட்சிதருகிறது. பாரத மாதா என்னும் தலைப்பில் தாயின் வீரம், தெய்வத்தன்மை, கைத்திறன், சொல் சிறப்பு, ஒளி, தோள்வலி, கொடைச்சிறப்பு, ஞானம் புகன்ற திருவாய் மகிமை, தியாக உள்ளம், மொழி உயர்வு, மதியூகம், அருள், கவிதைத்திறன், ஆகியவைகளை தெய்வீகப் பாத்திரச் சிறப்புகள் மூலம் வடித்துக் காட்டும் தனிச்சிறப்பைக் காணலாம். இராமாயணத்தில், இலங்கை நகரம், செல்வச் செழிப்பிலும், நாகரிக வளர்ச்சியிலும், கல்விச் சிறப்பிலும், போர்ப் பயிற்சியிலும் இசை ஞானத்திலும், படைவல்லமையிலும் சிறந்த நாடாக விளங்கியது. அந்நகரை ஆண்ட இராவணன், யாராலும் வெல்ல முடியாத வல்லமை மிக்கவனாக இருந்தான். பஞ்சபூத சக்திகளும் அவனுடைய ஆணைக்கு அடங்கியிருந்தன. " முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய தவ பலமும், எக்கோடியாராலும் வெலப்படாய் என்ற வரங்களின், பல மும்" கோட்டை பல மும், ஆயுதவலுவும், ஆண்மையும் வீரமும் வல்லமையும் கொண்டவனாக இருந்தான். ஆயினும் தன்னகங்காரத்தின் உச்சத்திலும் அதர்மமும் இரக்கமற்ற அரக்கத்தனமும் கொண்டவனாக இருந்த காரணத்தால் போரில் அழிந்தான். இலங்கை அரசனைப் போரில் வென்றான் இராமன். இராமன் சாதாரணமனித வடிவில் வானரப்படையைவைத்து இலங்கையை அழித்தான் என்பது அரசியலில் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். "குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக் கொளுத்திய, அரங்கத்திலே திருமாதுடன் பள்ளி கொண்டான் மருகா" என்று விநாயகரைப் பாடுகிறான் பாரதி. "நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி ந்லம் புரிவாள் எங்கள் தாய்- அவர் அல்லவராயின் அவரை விழுங்கிப்பின் ஆனந்தக் கூத்திடுவாள்" என்பதுதான் பாரதத்தாயின் இயல்பாகவே பாரதி காண்கிறான். எனவே, "முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்தவில் யாருடையவில் - எங்கள் அன்னை பயங்கரி பாரத தேவி நல் - Abfu 1 JT ளிையின் வில்"