பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 39 இதனிடையில் அமைந்த மனித வாழ்க்கை அறிதானது, இன்பமயமானது, என்பது இந்து தர்மத்தின் ஆதாரதத்துவமாகும். இதையே வேதங்களும் இதர சாத்திரங்களும் கூறுகின்றன.இதை பாரதி தனது கவிதைகளில் அடிநாதமாக இணைத்து இசைத்துக் கொண்டு செல்கிறான். இந்த தத்துவ ஞானக்கருத்தை பாரத மாதாவின் வடிவமாக, அதன் அங்கமாகவே பாரதி காண்கிறார். "ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள் உலகின்பக் கேணி யென்றே - மிக நன்றுபல்வேதம் வரைந்த கை பாரத நாயகி தன்திருக்கை" இத்தகைய உயர்ந்த தத்துவங்களை வரைந்து உலகுக்கு ஒளி காட்டி வழி வகுத்த பாரத நாட்டின் ஞானிகள், அறிஞர்கள், தவப்புதல்களின் சிந்தனைகளும் எழுது கோல்களும் பாரத தேவியின் சிந்தனையும்எழுது கோலுமாகும். நமது நாட்டின் அறிஞர்களில் ஒரு பிரிவினர் சித்தர்கள். அவர்களில் சிலர் தத்துவ ஞானிகள், சிலர் விஞ்ஞானிகள், சிலர் வைத்தியர்கள், இத்தனை அறிவுத்துறைகளும் இணைந்தவர்கள். பஞ்சபூதங்களின் செயல்திறன்களைக் கற்றவர்கள். மனித உயிரையும் உடலையும் மனதையும் பொறிகளையும் அதன் செயல்களையும் கட்டுப்படுத்தும் பயிற்சி பெற்றவர்கள். பாரதியும் தன்னை ஒரு சித்தர் என்று கூறிக்கொண்டார். " "எனக்கு முன்னேசித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்" என்று பாரதி கூறுகிறார் "அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி அகத்திலேயன்பினோர் வெள்ளம் பொறிகளின்மீது தனியரசாணை பொழுதெல்லாம் நினது பேரருளின் நெறியிலே நாட்டம், கருமயோகத்தில் நிலைத்திடல் என்றிவையருளாய் குறிகுணம் ஏதும் இல்லாதாய் அனைத்தாய்க் குலவிடும் தனிப்பரம்பொருளே! என்று உலகம் சித்த மயம் என பாரதி கூறுகிறார்.