பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 42 "மைந்நெறி வான் கொடையான்" என்று பாரதி கர்ணனை சிறப்பித்துக் கூறுவது அவனுடைய கொடைச் சிறப்பைப் பற்றியதாகும். இல்லையென்று வருவோருக்கு இல்லையென்று கூறாத நல்லிதயம் படைத்தோன் என்று கர்ணனைப் பற்றி பாரதக் கதை சிறப்பித்துக் கூறுகிறது. கர்ணனின் கொடைச்சிறப்பு, வேண்டியவர்க்கு வேண்டிய பொருள்களைக் கொடுத்தது மட்டுமல்ல, அவனிடம் இருக்கும் எதைக் கேட்டாலும் மனம் உவந்து அளிக்கக்கூடியவன். பாரதப் போருக்கான தயாரிப்புகள் நடந்து கொண்டிருந்தபோது கண்ணன் குந்தியை சந்தித்தான். அவளிடம் கர்ணனின் பிறப்பு ரகசியத்தை எடுத்துக்கூறி அவனே அவளது முதல் மகன் என்பதைத் தெரிவித்து அவனைக் கர்ணனிடம் அனுப்புகிறான். குந்திதேவி கர்ணனிடம் சென்று தான்தான் அவளுடைய தாய் என்பதை நிருபித்துவிட்டு, கர்ணனைத் தனது தம்பியருடன் வந்துவிடும்படி கேட்கிறாள். கர்ணன் அதற்கு மறுப்பு தெரிவித்து துரியோதனனுடன் உள்ள தனது நட்பை சிறப்பித்துக் குறிப்பிட்டு அந்த ராஜராஜனுக்கு செ ருமுனை சென்று செஞ்சோற்றுக்கடன் களிப்பதே தனக்கினிக் கருமமும் தருமமும் எனக்கூறிவிடுகிறான். அதன் பின்னர் குந்தி ஏற்கனவே கண்ணன் கூறியிருந்த ஏற்பாட்டின்படி கர்ணனிடம் இருவரங்கள் கேட்கிறான். ஒன்று அர்ஜுனன் மீது நாக பாணத்தை ஒரு தடவை மட்டும்தான் தொடுக்கவேண்டும் என்பது, இரண்டாவது மற்ற நால்வரில் எவரையும் போரில் கொல்லுதல் கூடாது என்று கேட்கிறாள். கொடையில் சிறந்த கர்ணன், அந்த வரங்களில் தனக்கு உள்ள பேராபத்தையும் பொருட்படுத்தாமல் : "தொறுகணை யொன்று தொடுக்கவும் முனைந்து செருச் செய்வோன் சென்னியோடிருந்தால் மறுகணை தொடுப்பது ஆண்மையோ வலியோ மானமோ மன்னவர்க்கு அறமோ உறுகணை யொன்றே பார்த்தன்மேல் தொடுப்பன் உய்த்துள்ளோர் உய்வர்என்றுரைத்தாள் தறுகணலர்க்கும் தறு கணானவர்க்கும் தண்ணனி நிறைந்த செங்கண்ணான்" -- எனத் தனது தாய் கேட்ட தானங்களை மனம் உவந்து கொடுத்தான் மாவிரன் கர்னன். "தறுகணலர்க்கும் தறுகணானவர்க்கும் தண்ணளி நிறைந்த செங்கண்ணான்' என்று கர்ணனது கொடைச்சிறப்பைக் கூறுவது வில்லியின் வாக்காகும்.