பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 47 விளக்கமாக அந்த முன்னுரை அமைந்துள்ளது. பகவத்கீதை பாரதத்தாய் உலகிற்கு அளித்த காணிக்கையாகும். பகவத்கீதை புகன்றவாய் பாரத தேவியின் வாயாகும். பாரத மாதாவின் வடிவத்தில் அது ஒரு அங்கமாகும். "போர்க்களத்தே பரஞான் மெய்க்கீதை புகன்ற தெவருடைவாய்? -பகை தீர்க்கத்திறந்தரு பேரினள் பாரத தேவிமலர்த்திருவாய்" என்பது பாரதியின் கவிதை வரிகளாகும். மகாபாரதக்கதையில் வரும் தலைசிறந்த தெய்வீகப்பாத்திர ங்களில் ஒன்று (பீஷ்மன்) வீட்டுமன் என்று புகழ்படைத்த தேவவிர்தன் "பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும் வீமனும் துரோணனும் வீட்டுமன்தானும் இராமனும் வேறுள இருந்திறல் வீரரும் நற்றுணை புரிவர்" என்று பாரதி பாரத நாட்டின் சிறந்த வீரர்களைக் குறிப்பிடுகிறான். பாரத மாதா "அந்த மில் புகழுடையான்-அந்த ஆரிய வீட்டுமன் அறமறிந்தோன்" என்றும் லஜபதிராய் பிரலாபம் என்னும் கவிதையில் "ஆரியர்தம் தர்ம நிலை ஆதரிப்பான் வீட்டுமனார் நாரியர்தம் காதல் துறந்திருந்த நன்னாடு" என்றும் மிகவும் சிறப்பித்துக் குறிப்பிடுகிறார். மகாபாரதக்கதையில் விட்டுமன் ஒரு தனித்தன்மையான தெய்வீகப் படைப்பு - தன்னல மற்ற தனி தியாகத்திற்கும் நாட்டுப்பற்றுக்கும் எடுத்துக் காட்டாக விளங்கும் மனித குல திலகமாகும். சந்திர குலத்தரசன் சந்தனுமகாராஜனுக்கும் கங்கைக்கும் பிறந்தவன் தேவ விரதன். கங்கை மைந்தன் என்று பெயர் பெற்றவன். தனது தந்தை சந்தனுமகாராஜன் செம்படவப் பெண்ணான சத்தியவாதி மீது காதல் கொண்டான். அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். ஆனால் சத்தியவதியின் தந்தையோ தன் மகள் வயிற்றுப்பிள்ளைகளுக்கு அரசுப் பட்டத்தைக் கொடுப்பதாக இருந்தால் தான் தனது மகளைத்தருவேன் என்று கூற, அப்போது சந்தனுராஜன் அதற்குத் தயங்க, தேவவிரதன் முன்வந்து தனது தந்தையின் காதலுக்காக தனக்கு வரும் அரச பதவி வேண்டாம் என்று வாக்குறுதி அளித்து, அவனது பிள்ளைகள் நாளைக்கு உரிமை கொண்டாடி