பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 50 என்று வரம் கேட்டு உலகிற்கு புது நெறி காட்டி உலகத்தலைமையை பாரதம் ஏற்க வேண்டும் என்பது பாரதியின் விருப்பமும் கனவு மாகும். கண்ணனைப் பற்றி கண்ணன் பாரதியின் உயிர் கண்ணனைத் தெய்வமாகவும் தெய்வீகப்பாத்திரமாகவும் உணர்ந்து பாரதி பாடுகிறான். ஆழ்வார்களும் இதர பக்தர்களும் கண்ணனை தெய்வமாக வரித்து பக்தி கொண்டு, கண்ணனிடம் சரணடைந்து பாடினார்கள். கண்ணனைக் குழந்தையாக பாலகனாக, விளையாட்டுப் பிள்ளையாக தங்கள் காதலனாக, நாயகனாக வரித்துப் பாடினர்கள். பாடி உருகினார்கள். கண்ணனுடன் கலந்து அவனது மலரடிகளில் சேர்ந்தார்கள். பாரதி கண்ணனை சர்வ சக்தியாகக் கண்டான். தெய்வ சக்தியாக மட்டுமல்லாமல் தெய்வ வடிவில், தெய்வீகத் தன்மை கொண்ட பலவேறு சக்திகளாகக் கண்டான். பாரதி கண்ணனைத் தனது உயிருக்கும் உயிரான கண்ணம்மாவாகவும் கண்டான். கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரச னாக, சீடனாக, குருவாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, காந்தனாக, ஆண்டவனாக, கண்ணம்மாவைக் குழந்தையாக, காதலியாக, குல தெய்வமாக அப்படிக் கண்ணனைப் பல வடிவங்களிலும் பாடியுள்ளது பாரதியின் தனிச்சிறப்பாகும். கண்ணன் என் தோழன் என்று தலைப்பிடும் போது பாரதி தன்னைப் பார்த்தனாகக் கருதிக் கொள்கிறான். கண்ணனும் பார்த்தனும் பாரதக்தையில் இணைந்தவர்கள். நர நாராயணர்கள். தத்துவஞான நோக்கின்படி கண்ணன் பரமாத்மா, பார்த்தன் ஜீவாத்மா, கண்ணன் கடவுள். பார்த்தன் பக்தன். போர்க்களத்தில் பார்த்தன் வில்விரன் கண்ணன் சாரதி. தத்துவ போதனையில் கண்ணன் குரு பார்த்தன் சிடன் உறவில் கண்ணனுக்குப் பார்த்தன் அத்தைமகன் மைத்துனன், தங்கையை மணந்தவன். துன்பத்தில் துணைவன். வாழ்வில் தோழன். = தோழமையின் சிறப்பை பாரதி இங்கே கூறுகிறார். கண்ணனுடைய தங்கை சுபத்திரையும் பார்த்தனும் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக நேசித்தனர். காதல் கொண்டனர். திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால் கண்ணனுடைய அண்ணன் பல ரா ம ன் க பத் தி ைர ைய துரியோதனனுக்கு மணம் முடித்துக் கொடுக்க வாக்குக் கொடுத்துவிட்டார்