பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 51 இதையறிந்து இரகசியமாக இரவோடு இரவாக சுபத்திரையைத் தூக்கிக் கொண்டு செல்வதற்கு பார்த்தனுக்குக் கண்ணன் உதவி செய்கிறான். இது ஒரு தோழன் செய்யும் உதவியாகும். "பொன்னவிர் மேனிச்சுபத்திரைமாதை புறங்கொண்டு போவதற்கே-இனி என்ன வழியென்று கேட்கில் உபாயம் இருகணத்தே உரைப்பான்" என்று பாரதி கூறுகிறார். o போர்க்களத்தில் பார்த்தனுக்கு முதன்மையான எதிரிகர்ணன். அக்கர்ணன் மகாவீரன்..அவன் பரசுராமனுடைய சீடன். மிகப்பெரிய அளவில் பராக்கிரமம் படைத்தவன். தானத்தில் சிறந்த புண்ணியன். போரில் பார்த்தனைக் கொல்லக் கூடிய சக்தி ஆயுதங்களை கையில் வைத்திருப்பவன். தன்னை யாரும் கொல்ல முடியாத அளவில் தனது உடம்பில் கவச குண்டலங்களைக் கொண்டவன். அம்மாவிரன் கர்ணனை போர்க்களத்தில் போர் நியாயத்தின்படி கொல்வது எளிதல்ல. யுத்ததர்மத்தின்படி போர் நடத்தினால் அவனைக் களத்தில் கொல்ல முடியாது. விட்டுமனும் துரோணனும் வீழ்ந்த பின் கெளரவர் படையின் தளபதி கர்ணன். அவனுக்கு ம் பார்த் தனு க்கும் கடும் போர் நடைபெறுகிறது. அர்ஜுனன் தனது வல்லமை முழுவதையும் ஆற்றல் அனைத்தையும் தனது சக்தி ஆயுதங்கள் தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும் பயன்படுத்தி விரப்போர் நடத்தினான். கண்ணனை சாரதியாகக் கொண்டு போர்க்களத்தில் அத்தனை சாகசங்களையும் செய்து பார்க்கிறான். ஆயினும் கர்ணனை அசைக்க முடியவில்லை. பார்த்தனைக் கொல்வதற்கு அவனுடைய தலைக் குக் குறி வைத்து கர்ணன் நாகபாணத்தை ஏவினான். கண்ணன் அதைக் கண்டு, தனது தேரை அழுத்தி, நாகக்கணையின் குறி தவறச் செய்து பார்த்தனைக் காப்பாற்றி விட்டான். தலைக்கு வந்த ஆபத்துதலைப்பாகையுடன் போய்விட்டது. போர் நீடித்துக் கொண்டிருந்தது. கர்ணனைக் கொல்வதற்கு என்ன உபாயம் என்று பார்த்தன் கண்ணனைச் சரணடைந்தான். தோழன் கண்ணன் அதற்கான உபாயங்களையும் சூழ்ச்சிகளையும் செய்தான். கர்ணனுக்குப் பாதுகாப்பாக இருந்த கவச குண்டலங்களை யும் புண்ணியம் அனைத்தையும் தானமாக வாங்கச் செய்து, போர்க்களத்தில் கர்ணன் மிகவும் சங்கடமாக இருந்த நேரத்தில் நிராயுத பாணியாக, போர் செய்ய (ԱՔ Գ. யாமல் இருந்த நேரத்தில் அவன் மீது பார்த்தனைக் கொடுகணை ஒன்றை ஏவச் செய்து அவ்வாறு சூதாகக் காண ன் கொல்லப்பட்டான்.