பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவர்சன் 52 "கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக் காணும் வழி யொன்றில்லேன் - வந்திங் குன்னை அடைந்தனன், என்னில் உபாயம் ஒரு கணத்தே உரைப்பான்" என்று தோழன் கண்ணனைப் பற்றி பாரதி கூறுகிறார். தொடர்ந்து கண்ணன் - என்தோழன் என்னும் கவிதை வரிகளில், கண்ணனுடைய சிறப்புகளைப் பற்றி, ஒரு தோழன் என்னும் முறையில் அவன் புரியும்சாதனைகளைப் பற்றி பாரதி பல வரிகளில் பாடுகிறார். அதில் ஒவ்வொருவரியும் ஒரு கோடி பெறும். நமது உள்ளத்தை நெகிழவைக்கும். நமது அறிவை வளர்க்கும். " கானகத்திலே சுற்றிக் கொண்டிருந்த போது நெஞ்சில் கலக்கம் ஏற்படாதவாறு உதவி செய்வான். பெரும் சேனைத்தலை நின்று போர் செ ய்யும் போதினில் தேர் நடத்திக் கொடுப்பான். என்றன் ஊனைவருத்திடும் நோய்வரும் போதினில் உற்ற மருந்து சொல்வான். நெஞ்சம் ஈனக் கவலைகள் எய்திடும் போதில் இதம் சொல்லி மாற்றிடுவான்" என்று கூறுகிறார். "பிழைக்கும் வழி சொல்ல வேண்டும் என்றால் ஒரு பேச்சினிலே சொல்லுவான் "உழைக்கும் வழி வினையாளும் வழி பயன் உண்ணும் வழியுரைப்பான் "அழைக்கும் பொழுதினில் போக்கு சொல்லாமல் அரைநொடிக்குள் வருவான் "மழைக்குக் குடை, பசிநேரத்துணவு என்றன் வாழ்வினுக்கு எங்கள் கண்ணன்" என்று கூறுகிறான். "கேட்ட பொழுதில் பொருள் கொடுப்பான் சொல்லும் கேலிபொருத்திடுவான் - எனை ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும் ஆறுதல் செய்திடுவான்- என்றன் நாட்டத்திற்கொண்ட குறிப்பினை யி..தென்று நான் சொல்லுமுன் உணர்வான் - அன்பர் கூட்டத்திலே இந்த கண்ணனைப் போல் அன்பு கொண்டவ ர்வேறுளரோ?" என்று கூறிப்பாடுகிறார். "உள்ளத்திலே கருவங்கொண்ட போதினில் ஓங்கியடித்திடுவான் - நெஞ்சில் கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னால் அங்கு காறி உமிழ்ந்திடுவான் - சிறு பள்ளத்திலே நெடுநாள் அழுகிக் கெட்ட பாசியை எற்றிவிடும் - பெரு வெள்ளத்தைப் போல் அருள் வார்த்தைகள் சொல்லி மெலிவு தவிர்த்திடுவான்.