பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 59 ஆனபொழுதும், கோலடி, குத்துப்போர், மற்போர். நானறிவேன் சற்றும் நயவஞ்சனையும் புரியேன், என்று பல சொல்லி நின்றர்ன் என்று அக்கண்ணன் கூறியதாகபாரதி குறிப்பிடுகிறான அக்கண்ணனை நான், "ஆளாகக் கொண்டுவிட்டேன், அன்று முதற்கொண்டு நாளாக நாளாக நம்மிடத்தே கண்ணனுக்கு பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன் கண்ணனால், பெற்றுவரும் நன்மை யெல்லாம் பேசி முடியாது என்று பெருமையுடன் தொடங்கி, "கனனை இமையிரண்டும் காப்பது போல் என்குடும்பம், வண்ண முறக்காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் விதி பெருக்குகிறான். வீடுகத்தமாக்குகிறான் தாதியர் செய்குற்றமெலாம் தட்டி அடக்குகிறான். மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய், ஒக்கநயம் காட்டுகிறான். ஒன்றும் குறைவின்றிப் பண்டம் எலாம் சேர்த்து வைத்துப்பால் வாங்கி மோர் வாங்கிப் பெண்டுகளைத்தாய் போல் பிரியமுற ஆதரித்து நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய் பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய் எங்கிருந்தோவந்தான்"என்றெல்லாம் கண்ணனுடைய சேவையைப் பாராட்டி. "இங்கிவனையான் பெறவே என்னதவம் செய்துவிட்டேன்" என்று போற்றி பெருமைப்பட்டு, "கண்ணன் எனதகத்தே கால்வைத்த நாள் முதலாய் எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம் தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும் ஒளி சேர்நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண். கண்ணனை நான் ஆட்கொண்டேன் கண்கொண்டேன் கண்கொண்டேன்" என்று பரவசமடைந்து பாடுகிறான் பாரதி சிறப்பு மிக்க இந்தக் கவிதைவரிகளைப் பாடப்பாடத் தெவிட்டாத சுவையும் அறிவுக்கு விருந்தும் பொருளும் கிடைக்கிறது.