பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி பணிகளையும் படைப்புகளையும் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதற்கு பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. சுப்ரமணிய பாரதி ஒரு மாபெரும் கவிஞன், ஒரு எழுத்தாளன், ஒரு பத்திரிகையாளன், ஒரு தேசபக்தன் என்றும் முறையில் அவருடைய படைப்புகளும், கருத்துக்களும் இன்னும் விரிவாக மக்களிடம் செல்ல வேண்டும். நமது கல்வி நிலையங்களுக்குள் செல்ல வேண்டும். பாரதி ஒரு புரட்சிகர ஜனநாயகப் பெரும் புலவன் என்னும் முறையில் அவருடைய கவியுள்ளத்தின் விரிவை நாம் காணவேண்டும். கம்பன், திருவள்ளுவர், இளங்கோவடிகள் வரிசையில் பாரதி உயர்ந்து நிற்பதை நாம் காண்கிறோம். பாரதி சிந்தனைகளின் சிறப்பை அதன் அனைத்து பரிமானங்களிலும் கண்டு தெளிய வேண்டும். பாரதியின் படைப்புகளைப் பற்றி விளக்கியும் விரிவுபடுத்தியும் எண்ணற்ற பல நூல்களும் வெளிவரவேண்டும். பாரதி பாடியுள்ள ஒவ்வொரு பகுதி பாடல்களுக்கும் விளக்கவுரைகள் வெளிவரவேண்டும். நமது பல்கலைக்கழகங்களில் கம்பன், வள்ளுவன், இளங்கோவடிகள், பாரதிக்கும் தனித்துறைகள் நிறுவி ஆய்வுகளும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்த வேண்டும். பாரதி ஒரு அறிய நூலை, ஒரு சிறப்பான காவியத்தை, முக்கிய அறநெறிக்கருத்துக்களைக் கொண்ட தொகுப்பை மட்டும் எழுதவில்லை. பாரதி, பாரத பூமி இதுவரை தோற்றுவித்திருக்கும் நல்ல அனைத்தையும் கிரகித்து, அல்லன அனைத்தையும் நிராகரித்து ஒரு புதிய திசை வழியை சமுதாய முன்னேற்றத்திற்கான திசை வழியைக் காட்டியுள்ளான். ஒரு புதிய மார்க்த்தைக் காட்டியுள்ளான். பாரதி பாரத நாட்டின் பண்பாட்டு தளத்தில் நின்று, நாட்டு மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், வழி காணவும், முன்னேற்றம் காணவும் தனது கவிதைகளின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 1980-ம் ஆண்டுகளில் நான் ஜனசக்தி நாளிதழின் ஆசிரியராக இருந்த போது பாரதி நூற்றாண்டு விழாவின் போது ஜன சக்தி பாரதி சிறப்பு மலர் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுத்து ஒரு அறிய சிறப்பு மலர் கொண்டு வந்தோம். 1982-83 ம் ஆண்டு முழுவதிலும் ஜன சக்தி நாளிதழில் பாரதி யின் பல பரிமானங்களைப் பற்றியும் பல கட்டுரைகளும் வெளியிடப்பட்டன. சிறப்பு மலரிலும் பல அறிஞர்கள் பாரதியைப் பல கோணங்களிலும் ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதியிருந்தனர். அந்த சிறப்பு மலரை உருவாக்கி வெளியிடுவதில், பாரதியின் புதிய கருத்துக்களில் முழுமையாக ஈடுபாடு கொண்டிருந்த அறிஞர் ஆர்.கே.கண்ணன் அவர்கள் பெரும் துணையாக இருந்து சிறந்த