பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 62. "உயர்நிலைப் படுத்தலில் ஊக்கமிக்கவனாய் இன்னது செய்திடேல் இவரொடு பழகேல் இவ்வகை மொழிந்திடேல் இனையனவிரும்பேல் இன்னது கற்றிடேல் இன்னநூல் கற்பாய் இன்னவர் உறவு கொள் இன்னவை விரும்புவாய் எனப் பலதர்மம் எடுத்தெடுத்தோதி ஒய்விலாது அவனோடு உயிர்விடலானேன்" என்று கூறுகிறான். கண்ணன் சீட வடிவத்தில் இந்த பூமியில் உள்ள பல கோடிக்கணக்கான குழந்தைகள் ஒவ்வொன்றின் பால பருவவடிவங்களாகும். இளம்பருவத்தில் உள்ள ஒரு சீடனின் குண இயல்புகளை பாரதி இங்கு கவிதையில் வடித்துள்ளான். நமது இல்லத்தில் உள்ள நமது சிறுவன் சுட்டித்தனம், ஓயாத ஆற்றல் ஓடி விளையாடும் உரம் எதற்கும். கவலைப்படாத யாருக்கும் கட்டுப்படாத உள்ளமும் துடிப்பும் கொண்டவன். கதையில் வரும் கணவன் சொல்வதற்கெல்லாம் எதிர்ச் சொல்கூறும் மனைவி போல கண்ணன், " நான் காட்டும் நெறியினுக் கெல்லாம் நேர் எதிர் நெறியே நடப்பானாயினன்" என்று பாரதி குறிப்பிடுகிறார் வித்தையில் விருப்பம் இல்லாதவனாய் கல்வியிலே கவனம் இல் லாதவ னாய் நல்ல செயல்களிலே நாட்ட மில்லாதவ னாய் வேளாவேளைக்கு உணவருந்தாமல் ஊர் சுற்றித்திரிந்து கொண்டுவரும் கண்ணனை எல்லோரும் ஏளனம் செய்தனர். கிறுக்கன்என்று கூறிச்சிரித்தனர். அதைக் கேட்ட போது அச்சொற்கள் எனது நெஞ்சை அறுத்தது. உள்ளம் வெதும்பிற்று. "முத்தனாக்கிடநான் முயன்றதோர் இளைஞன் பித்தன் என்று உலகினர் பேசிய பேச்சுஎன் நெஞ்சினை அறுத்தது' என்று கவலையுற்று மனம் வெந்து "----- நீதிகள் பலவும் தந்திரம் பலவும் சாத்திரம் பலவும் சொல்லி நான் கண்ணனைத் தொளைத்திடலானேன் தேவநிலையிலே சேர்ந்திடாவிடினும் மானுடம் தவறி மடிவுறா வண்ணம் கண்ணனை நானும் காத்திடவிரும்பி என்று நாட்டிலுள்ள ஒவ்வொரு இளைஞனையும் தன் கண் முன்னால் நிறுத்தி பாரதி பாடுகிறார். தேவ நிலைக்கு உயர்த்தா விட்டாலும் மானுடம் தவறி மடிவுராவண்ணம் நமது நாட்டு இளைஞனை உயர்த்த பாரதி பாடுகிறார்.