பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 63 அதற்காக எத்தனையோ முயற்சிகள் செய்தும் நல்லவார்த்ததைகள் கூறியும் கெஞ்சிக் கேட்டும், அதட்டிக் கூறியும் தன் வழிக்குக் கொண்டு வர முயன்றும் முடியவில்லை. "கண்ணன் பித்தனாய்க் காட்டானாகி எவ்வகைத் தொழிலிலும் எண்ண மற்றவனாய் எவ்வகைப் பயனிலும் கருத்திழந்தவனாய் குரங்காய், கரடியாய், கொம்புடைப் பிசாசாய் யாதோ பொருளாய் எங்கோ நின்றான் என்று மிகவும் வருந்தமடைந்து, எவ்வாறேனும் இவனை யோர் தொழிலில் ஓரிடந்தன்னில் ஒருவழி வலிய நிறுத்துவோமாயின் நேருற்றிடுவான் என்று எண்ணிக்காத்திருந்தேன். ஒரு நாள் கண்ணனைத்தனியே விட்டிற்கு அழைத்துவந்து, "மகனே, என்பால் வரம்பிலா நேசமும் அன்பு நீ உடையை அதனை யான் நம்பி நின்னிடம் ஒன்று கேட்பேன், நீயது செய்திடல் வேண்டும், சேர்க்கையின் படியே மாந்தர்தம் செயலெலாம் வகுப்புறல் கண்டாய் "சாத்திரநாட்டமும்தருக்கமும் கவிதையில் மெய்ப்பொருள் ஆய்வதில் மிஞ்சிய விளைவும் "கொண்டோர் தமையே அருகினில் கொண்டு .ெ பாருளினுக் கலையும் நேரம்போக மிஞ்சிய பொழுதெலாம் அவருடன் மேவி இருந்திடல் ஆகுமேல் எனக்கு நன்றுண்டாம்" என்று கூறிதன்னுடன் இருக்கும்படி கண்ணனிடம் வற்புறுத்திக் கூற, அதற்குக் கண்ணனும் தனது ஒப்புதல் தெரிவித்து, "அங்ங்னே புரிவேன்.ஆயினின்னிடத்தே தொழில் இலாது யாங்ாவனம் சோம்பரில் இருப்பது காரியம் ஒன்று காட்டுவையாயின் இருப்பேன்" என்றான். கண்ணனுடைய இயல்பையும் திறமையையும் கருதி" என் செய்யுளையெல்லாம் நல்லதோர் பிரதியில் நாள் தோறும் எழுதிக் கொடுத்திடும் தொழிலினைக் கொள்ளுதி" என்றேன். நன்றெனக்கூறி ஒரு நாழிகை இருந்தான். பின்னர் செல்கிறேன் என்றான். பல முறை சொல்லியும் கேட்கவில்லை. எனக்கும் கோபம் மேலிட்டு"போபோ" என்றேன். "கண்ணனும் எழுந்து செல்குவானாயினன்", விழிநீர் சோர்ந்திட நான் "மகனே போகுதி வாழ்க நீ நின்னைத் தேவர் காத்திடுக நின்றனைச் செம்மை