பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 64 செய்திடக் கருதி ஏதேதோ செய்தேன் தோற்றுவிட்டேனடா! சூழ்ச்சிகள் அழிந்தேன் மறித்தினிவாராய் செல்லுதி வாழிநீ" என்று துயர்நீக்கி அமைதியோடிருந்தேன்" எனப்பாடுகிறார் பாரதி. கண்ணன் சென்றனன். திரும்பி ஓர் கணத்தேவந்தான். நல்ல தோர் எழுது கோல் கொணர்ந்தான். நான் காட்டிய பகுதியை கவினுறவரைந்தான். - "ஐயனே! நின்வழியனைத்தையும் கொள்வேன் தொழில் பல புரிவேன் துன்பம் இங்கென்றும் இனி நினக்கு என்னால் எய்திடா" தெனப் பல நல்ல சொல் உரைத்து நகைத்தனன் மறைந்தான் மறைந்ததோர் கண்ணன் மறு கணத்தென்றன் நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவானாயினன் "மகனே ஒன்றையாக்குதல் மாற்றுதல் அழித்திடல் எல்லாம் நின் செயலன்று காண் தோற்றேன் என நீ உரைத்திடும் பொழுதிலே வென்றாய், உலகினில் வேண்டிய தொழிலெலாம் ஆசையும் தாபமும் அகற்றியே புரிந்து வாழ்க நீ என்றான். வாழ்க மற்றவனே" என்று அந்த அற்புதமான கவிதையைப் பாடி முடிக்கிறார். பாரதியின் இந்தப் பாடல் நெஞ்சை அள்ளுவதாகும். உலக அனுபவமும் கடமையும் பக்தியும் இணைந்து அன்புடன் கண்ணனை இந்நாட்டின் இளைஞன் வடிவத்தில் கண்டு ஆணையிட்டு வாழ்த்திக் கடைசியில் கண்ணனிடமே அறிவுரையும் வாழ்த்தும் பெற்று அவனையும் வாழ்த்திக் கவிதையை முடிக்கிறார். ஆண்டவனுக்கே பல்லாண்டு பாடிய மரபு நமது மரபாகும். கண்ணனுக்கே வாழ்த்துக் கூறி பாரதி தனது பாட்டை முடிக்கிறார். கண்ணனைச் சீடனாகக் கண்ட பாரதி அவனை தனது சத்குருவாகவும் கண்டு அற்புதமான முறையில் பக்திப் பரவசத்துடன் புன்னாக வராளி ராகத்தில் ஒரு கவிதையைப் பாடுகிறார். "சாத்திரங்கள் பல தேடினேன். அங்கு சங்கையில்லாதன சங்கையாம் - பழங் கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் - பொய்மைக் கூடையில் உண்மை கிடைக்குமோ" என்று பாரதி தன்து கவிதையைத் தொடங்குகிறார்.