பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 65 பாரதி "நாடு முழுதும் சுற்றி பல நாட்கள் அலைந்து திரிந்து கடைசியில் யமுனைக் கரையில் தடி யூன்றிச் சென்று கொண்டிருந்த ஒரு கிழவரைக் கண்டார். " ஒளிகூடும் முகமும் தெளிவு குடிகொண்ட விழிகளும், சடைகளும் வெள்ளைத் தாடியும் கொண்ட அந்தக் கிழவனாரை வணங்கித் தனது உள்ளத்து ஆசையைக் கூறுகையில், = "தம்பி நின்னுள்ளத்திற்குத் தகுந்தவன் சுடர் நித்திய மோனத்திருப்பவன் - உயர் மன்னர் குலத்திற்பிறந்தவன் - வட மாமதுரைப்பதி ஆள்கிறான்-கண்ணன் i தன்னைச் சரனென்று போவையால் அவன் சத்தியம் கூ றுவர்" என்றனர் அவர் கூறியதைக் கேட்டு அம்மாமதுரைக்குச் சென்றேன். அங்கு வாழ்கின்ற கண்ணனைப்போற்றி, எனது பெயரையும் ஊரையும் கருத்தையும் கூறி எனக்கு நன்மைதரும்படி வேண்டினேன். ஆனால் அந்தக் கண்ணன் அங்கு எப்படியிருந்தான், என்ன செய்து கொண்டிருந்தான், "காமனைப் போன்ற வடிவமும் - இளங் காளையர் நட்பும் வழக்கமும் - கெட்ட பூமியைக் காக்கும் தொழிலிலே - எந்தப் போதும் செலுத்திடும் சிந்தையும் ஆடலும் பாடலும்" கண்டேன். ஆற்றங்கரையில் கண்ட கிழவன் மீது எனக்குக் கடுங்கோபம் ஏற்பட்டது. "சிறு நாடு புரந்திடு மன்னவன் - கண்ணன் நாளும் கவலையில் மூழ்கினோன்-தவப் பாடுபட்டோர்க்கும் விளங்கிடா- உண்மை பார்த்திவன் எங்ங்ணம் கூறுவான்? என்று கருதியிருந்தேன். ஆனால் அக்கண்ணன் என்னைத்தனி இடத்திற்கு அழைத்துச் சென்று "மைந்தனே! - பர ஞானமுரைத்திடல் கேட்பை நீ - நெஞ்சில் ஒன்றும் கவலையில்லாமலே - சிந்தை ஊன்ற நிறுத்திக்களைப்புற்றே -தன்னை வென்று மறந்திடும் போழ்தினில் - அங்கு விண்ணையளக்கும் அறிவு" கிட்டும் என்று தத்துவ போதனையுடன் தொடங்குகிறான்.