பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 67 வானதனிச்சுடர் நான் கண்டேன். அதன் ஆடல் உலகென நான் கண்டேன்" என்றும் துள்ளிக் குதித்துப் பாடலை முடிக்கிறார். அறிவில் ஒளிவீச வேண்டும். மதியில் நுட்பம் விளங்க வேண்டும். அறநெறி வழியில் நீதி முறைவழுவாமல் பூமியில் தொழில்கள் செய்ய வேண்டும். சகலகலைகளும் வளர்ச்சியடைந்து தெளிவு பெறவேண்டும். மிகவும் சிறப்பாக, பொருளியல் கண்டு தெளிய வேண்டும். மக்களுக்கு ஏற்படும் தொல்லைகள் திர வேண்டும். இன்பநிலை இனிய குடும்ப நிலை செல்வம் கீர்த்தி ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி முதலிய அனைத்துக் கலைகளிலும் மக்களின் உள்ளம் ஈடுபட்டு சமுதாய நிலை உயரவேண்டும். ஈனநிலை எவருக்கும் ஏற்படக்கூடாது. அனைவருக்கும் அவர் நாடும் நல்லன. அனைத்தும் கிடைக்க வேண்டும். இந்த ஞானம் அனைவருக்கும் ஏற்பட வேண்டும் என்று கண்ணன் சற்குருவடிவில் நின்று பாரதப் பண்பாட்டின் திசைவழியில் பாரதியிடம் போதனை செய்வதாகக் கூறும் இந்தக் கருத்துக்களே பாரதியின் சமுதாய நெறிக்கருத்துக்களாகும். இந்த போதனைகளில் பாரதி அறிவுச்சுடரையும் அச்சுடரில் அசைந்தாடும் முழு உலகையும உலக வடிவையும் காண்கிறார். அடுத்த படியாக கண்ணனைக் குழந்தையாக விளையாட்டுப் பிள்ளையாக காதலனாக கண்ணம்மாவைக் காதலியாக பாவித்து பாரதி பாடியுள்ள கவிதைகள் அதி அற்புதமான அன்பைக் காதலை இனிய குடும்பச்சூழலை இயற்கையுடன் இணைத்து கவிதை வடிவில் வடித்து எடுத்திருப்பது தேனும்பாலும் கலந்த இனிப்பாகும். சத்தும் சுவையும் நிறைந்த உணவாகும். இந்தியப் பண்பாட்டுதளம் காதலுக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் ஒரு தனித்தன்மையான இலக்கணத்தையே வகுத்துள்ளது. வாத்சாயனரின் காமசூத்திரமும் வள்ளுவரின் காமத்துப்பாலும் மிகச் சிறப்பான தனி இலக்கியங்களாகும். இரதியையும் மன்மதனையும் உருவாக்கி காதலின் இயல்பை இனிமையை இணைப்பை தெய்வீக நிலைக்கு உயர்த்திய பெருமை இந்திய மரபுக்குண்டு. சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்னும் சொற்களில் பாரதி எத்தனை உயிரோட்டமான கருத்தைக் கூறியுள்ளார் என்பது இக்கவிதைகளின் பெருமையாகும். கடைசியில் கண்னம்மாவைக்குல தெய்வமாக்கி, கண்ணனைச் சரணடைந்து உலகத்து நன்மையை வேண்டுவது மிகவும் அற்புதமான கவிதையாகும். சரணகதி தத்துவம் இந்து தர்ம தரிசனத்தில் ஒரு தனித் தன்மையான தத்துவமாகும். m