பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 7 I " மெய்தவர்பலருண்டாம் வேடங்கள் பூண்டவர் பலருண்டாம்" என்று இருவகை மக்களையும் குறிப்பிடுகிறார். இது பாரதி கவிதை முறையில் எதார்த்தவாதப் போக்காகும். துரியோதனனுடைய சபையைக் குறித்து விவரிக்கும்போது துரியோதனப் பெயரான் நெஞ்சத்துணிவுடையான் முடிபணி வறியான்" என்று துரியோதனன் குறித்தும் "அந்தமில் புகழுடையான்-அந்த ஆரிய வீட்டுமன் அறம்அறிந்தோன்" என்று வீட்டுமனைக்குறித்தும், விதுரனைப்பற்றி "மெய்ந் நெறியுணர்விதுரன்" என்று பொய்ந் நெறிந்தம்பியரும் அந்தப் புலைநடைச்சகுனியும் வுடனிருந்தார் என்று தம்பியரையும் சகுனியைப் பற்றியும் -- "மைந்நெறிவான் கொடையான் - உயர் மானமும் வீரமும் மதியுமுளோன் உய்ந்நெறி அறியாதான் - இறைக் குயிர்நிகர் கன்னனும் உடன் இருந்தான் என்று கர்ணனைப் பற்றியும் குறிப்பிடுவதைக் காண்கிறோம். பாண்டவரில் மூத்த தருமனைப்பற்றி துரியோதனன் வாய் மொழியாக பாரதி கூறிடும் கருத்துக்கள் அத்துரியோதனனுடைய உள்ளக்கிடக்கையைக் கூறுவதாக இருப்பினும் எக்காலத்திற்கும் எல்லா இடங்களுக்கும் பொருந்துவதான சில அரசியல் கருத்துவடிவங்களையும் அதில் காண முடிகிறது. "விர மிலாதருமன்-தனை வேந்தர் முதலென விதித்தனவே" என்றும் "கிழவியர் தபசியர் போல்-பழங் கிளிக்கதைபடிப்பவன், பொறுமை என்றும் பழவினை முடிவென்றும் - சொலிப் பதுங்கி நிற்போன், மறத்தன்மையிலான் வழவழத்தர்மனுக்கோ-இந்த மாநிலமன்னவர் தலைமைதந்தார்" என்றும் துரியோதனன் பேசியதை பாரதி குறிப்பிடுகிறார். இத்துடன் வேறு இடங்களிலும் பாரதி தர்மனைப் பற்றி உயர்த்தியோ பாராட்டியோ பேசவில்லை. பாரதக்கதையில் விட்டுமன் கருணன் அர்ஜுனன் பீமன் துரோணன் முதலியோரைக் குறிப்பிடுவது போல் தருமனைப் பற்றி பாரதி பாராட்டிப் பேசவில்லை.