பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி ஆலோசனைகளைத் தெரிவித்து உதவியிருந்தார். அது முதல் பாரதி யை ப் பற்றி , பாரதி யி ன் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி பல நூல்கள் எழுத வேண்டும், வெளியிட வேண்டும் என்ற எண்ணம் உருவாயிற்று. அந்த எண்ணம் நிறைவேறுவதில் வழக்கம் போல் பல சிரமங்கள் ஏற்பட்டன. ஆயினும் இப்போது அந்த வழி யில் பாரதி பற்றிய நூல்கள் பல வும் எழுதப்பட்டு அவை வெளியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பகுதியாகவே பாரதப்பண்பாட்டுத் தளத்தில் பாரதி என்னும் இந்த நூல் வெளியாகிறது. சென்னை க.க நகரில் நான் குடியிருந்தபோது சிறந்த தமிழறிஞரும் இலக்கிய சொற் பொழிவாளருமான திரு.புலவர் தமிழ்முடி அவர்களை சந்தித்து அவருடன் கலந்துரையாடும் வாய்ப்பு ஏற்பட்டது. புலவர் தமிழ்முடி அவர்கள் பாரதி வளர்ச்சி சங்கம் என்னும் அமைப்பை நடத்தி கொண்டிருக்கிறார். அந்த அமைப்பின் மூலம் வாரம் தோறும் சிறந்த சொற்பொழிவுகளை நடத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய சிறந்த சொற்பொழிவுகளைக் கேட்பதற்காக அக் கூட்டங்களில் நானும் கலந்து கொண்டேன். அப்போது பாரதியைப் பற்றி ஒருநாள் தனியாக ஒரு சிறப்புரை நிகழ்த்த வேண்டும் என்று என்னை வற்புறுத்கக் கேட்டுக் கொண்டார். அவருடைய வற்புறுத்தலைத் தட்ட முடியாமல் நானும் ஏற்றுக் கொண்டு 'பாரதப் பண்பாட்டு தளத்தில் பாரதி' என்னும் தலைப்பில் ஒரு நாள் பாரதி வளர்ச்சி சங்கத்தின் கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்தினேன். அந்த உரை ஒரளவில் சிறப்பாகவே அமைந்தது. அதன் குறிப்புகளை நான் திரும்பவும் பார்த்த போது அதனடிப்படையில் அக்கருத்துக்களை விரித்து ஒரு நூலாகவே எழுதிவிடலாம் என்று தீர்மானித்து இந்த நூல் எழுதி முடிக்கப்பட்டது. இந்த நூலை அச்சிட்டு வெளியிடுவதற்காக நிதி உதவி கேட்டு மாநில அரசின் தமிழ்வளர்ச்சித்துறைக்கு விண்ணப்பம் செய்யப்பட்டு தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்கள் வெளியிட நிதி உதவித் திட்டத்தின் கீழ் இந்த நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நூலை சிறந்த முறை அச்சிடுவதற்கு மாணவர் மறுதோன்றி அச்சகத்தார் முன்வந்துள்ளார்கள். இந்த நூல் தொடர்பாக எனக்கு ஊக்கமளித்து உதவி செய்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூலை வாங்கிப்படித்தும், அடுத்து வரும் நூல்களுக்கும் ஆதரவளித்தும் ஊக்கமூட்டும்படி வாசகர்களைக் கேட்டு, இந்த நூலை தமிழ் கூறும் நல்லுகத்திற்கு சமர்ப்பிக்கிறேன். அ.சீனிவாசன் நூலாசிரியர்