பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 73 முன்பிருந்த பழக்கம் என்பதை பாரதி மிக வலுவாகச் சாடுகிறான். முன்பிருந்தவழக்கம்எனக்கருதி தருமன் சூதாட இணங்கிவிட்டான். "பொய்யதாகும்.சிறுவழக்கொன்றைப் புலனில்லாதவர்தம்முடன் பாட்டை ஜயன் நெஞ்சில் அறமெனக் கொண்டான்" என்பதை, தர்மன் சூதாட இணங்கியதை, எத்தனை கடுமையாகச் சாடியுள்ளான் என்பதை அவனுடைய அடுத்த கவிதை வரிகளில் காணலாம். அப்பாடல் வரிகளில் பாரதி கூறும் கருத்துக்கள், பாரதிக்கே உரிய தனித்தன்மையான அதே சமயத்தில் மரபு வழியிலான கருத்துக்களும் ஆகும். அக்கருத்துக்கள், நமது பண்பாட்டு தளத்தின் மேம்பாட்டின் அடிநாதமாகும். "முன்பிருந்தோர் காரணத்தாலே மூடரே பொய்யை மெய்யெனலாமோ முன்பெனச் சொலுங்காலமதற்கு மூடரே ஒரு வரையறையுண்டோ முன்பெனச் சொல்லின் நேற்று முன்பேயாம் மூன்று கோடிவருடமும் முன்பே முன்பிருந்த தெண்ணிலாது புவிமேல் மொய்த்த மக்களெல்லாம் முனிவரோ? "நீர் பிறக்கு முன் பார்மிசை மூடர் நேர்ந்ததில்லையென நினைந்திரோ? பார் பிறந்தது தொட்டு இன்று மட்டும் பலபலப்பல பற்பல கோடி கார்பிறக்கும் மழைத்துளிப்போல கண்ட மக்கள் அனைவருள்ள்ேயும் நீர்பிறப்பதன் முன்பு, மடமை நீசத்தன்மை யிருந்தனவன்றோ? பொய்யொழுக்கை அறமென்று கொண்டும் பொய்யர் கேலியைச் சாத்திரமென்றும், "ஐயகோ, நங்கள் பாரத நாட்டில் அறிவிலார் அறப்பற்று மிக்குள்ளோர் நொய்யராகியழிந்தவர் கோடி" என்று தனது வலுவான கருத்துக்களைக் கூறி மேலும் கதையைத் தொடர்கிறார்.