பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 74. "நூல் வகை பல தேர்ந்து தெளிந்தோன் மெய்யறிந்தவர்தம்முள் உயர்ந்தோன் விதியினால் அத்தருமனும் வீழ்ந்த ான்" என்றும் தர்மன் மீது சற்று பரிதாபப்பட்டும் பாரதி குறிப்பிடுகிறார். தர்மன் சூதாட்டத்தில் நாட்டை பணயமாக வைத்து இழந்தான். இந்த நிகழ்ச்சியைக் கதையில் கூறும்போது பாரதிக்கு ஏற்பட்டிருந்த கோபத்திற்கு அளவே இல்லை. பாரதம் அடிமைப்பட்டிருந்த நிலையும் அந்நியர் ஆட்சியின் கொடுமையும் பாரதியின் கண்ணுக்கு முன்னே வந்து நிற்கிறது. "கோயிற் பூசை செய்வோர்- சிலையைக் கொண்டுவிற்றல் போலும் வாயில் காத்து நிற்போன் - விட்டை வைத்திழத்தல் போலும் ஆயிரங்களான - நீதி அவை உணர்ந்த தருமன் தேயம் வைத்திழந்தான் - சிச்சீ சிறியர் செய்கை செய்தான்" _ என்று பாரதி கூறும்போது அவருடைய அரசியல் நெறிபற்றிய கருத்தும் தேச பக்தியும் மக்களாட்சி உணர்வும் மேலோங்கி நிற்கிறது.ஒரு வீட்டிற்கு வாயில் காப்போனாக இருப்பதைப் போல நாட்டிற்குக் காவலனாக அரசன் இருக்க வேண்டும் என்று இங்கு பாரதி கூறும் கருத்து நமது நாட்டின் மரபு வழி வந்த அரசியல் நெறியாகும். மன்னன் உடம்பென்றும் மக்கள் உயிரென்றும் கம்பன் கூறிய புதுக்கருத்தும் இங்கு கவனிக்கற்பாலதாகும். பாரதி மேலும் கூறுகிறார். "நாட்டு மாந்தர் எல்லாம்-தம்போல் நரர்கள் என்று கருதார் ஆட்டுமந்தையாம் என்று - உலகை அரசர் எண்ணிவிட்டார் காட்டும் உண்மை நூல்கள் பலதாங் காட்டினார்களேனும்

  • நாட்டு ராஜநீதி - மனிதர்

நன்கு செய்யவில்லை. "ஒரஞ்செய்திடாமே தருமத் து |றுதி கொன்றிடாமே சோரம் செய்திடாமே - பிறரைத் துயரில் வீழ்த்திடாமே