பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 78 "முன்னிழுத்துச்சென்றான். வழிநெடுகமொய்த்தவராய் என்ன கொடுமையிது வென்று பார்த்திருந்தார்" ஊரவர்தம் கீழ்மை உரைக்கும் தரமாமோ? வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன் தன்னைமிதித்துத் தராதலத்தில் போக்கியே பொன்னையவளந்தப் புரத்தினிலே சேர்க்காமல் நெட்டை மரங்களென நின்று புலம்பினர், பெட்டைப் புலம்பல் பிறர்க்குத்துணையாமோ? என்று பாரதி தனது கவிதை வரிகளில் கடுமையான சொற்களில் கூறுகிறார். நமது தெய்வங்களின் கைகளில் உள்ள ஆயுதங்கள் எல்லாம் கொடுமைகளையும் அக்கிரமங்களையும் அநியாயங்களையும் எதிர்க்கும் ஆயுதங்களாகும். அவைகளின் பிரதிநிதிகளாகவே பாரதமக்கள் திகழ வேண்டும். அதுவே நமது இயல்பான குணமாக இருக்க வேண்டும் என்பதே பாரதியின் கொள்கை கோட்பாடாகும். காவியத்தின் உச்ச கட்டமாக, பாரதி ஒரு அபூர்வமான அவலம் நிறைந்த காட்சியை நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். வியாச பாரதத்தின் வழியிலே வார்த்தைக்கு வார்த்தை அதன் மொழி பெயர்ப்பாகவே இக்கதையை எழுதியிருக்கிறேன். என்று பாரதி தனது முன்னுரையில் குறிப்பிட்டிருந்த போதிலும் பாரதி தனது சொந்த சரக்காக வளர்ச்சிப் போக்கின் வடிவமாக, புதியகாலத்தின் தேவையாக நம்மை மிக உயர்ந்த ஒரு சிந்தனை கட்டத்திற்கு இட்டுச் சென்று பாரதத்தின் மேன்மையை உயர்த்துகிறார். பாரதியின் பாஞ்சாலி சபதம் நமது பாரத நாடு படைத்தது ஸ் எ தலை சிறந்த இலக்கியங்களின் வரிசையில் முன்நிற்கிறது. பாஞ் சாலி சபதத்தின் கதைப் பகுதி மகாபாரதப் பெருங்கதையின் ஒரு சிறு நிகழ்ச்சிதான். ஆயினும் அது முக்கியமான நிகழ்ச்சியாகும். கதையின் முக்கியமான திருப்பத்திற்கான கருவாகும். பாரத நாட்டையே குலுங்க வைத்த, என்றென்றைக்கும் மறக்க முடியாத, நமது நெஞ்சில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும் ஒரு நிகழ்ச்சியாகும். எனவே தான் பாரதி தனது காவியத் தி ற்கு இந்தக் கதை நிகழ்ச்சி யை தேர்ந்தெடுப்பதற்கான ஆதர்சம் அவனுடைய உள்ளத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும். பாரதிக்கு கண்ணனிடமும் இராமனிடமும் அபாரமான பக்தியும் பற்றும் ஈடுபாடும் இருந்திருக்கிறது. நமது நாட்டின் காவியங்களில் பெருங்காவியமாக இலக்கியங்களில் பேரிலக்கியங்களாக பாரத நாட்டின் இலக்கியங்களின் இருகண்களாக அமைந்திருப்பது இராமாயணமும் மகாபாரதமுமாகும் என்பதை நாம் அறிவோம். இவ்விரண்டையும் இருபெரும் இதிகாசங்களாக நாம் போற்றுகிறோம்.