பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 79 இராமனும் கண்ணனும் பாரத நாடு முழுவதிலும் இமயம் முதல் இந்துமாகடல்வரை அனைத்துமக்களிடமும் பரவியுள்ள தெய்வீகப் பெயர்களாகும். இராமன் கிருஷ்ணன் என்ற இரு பெயர்களும் இந்து சமுதாயத்தில் சாதி, சமய, மொழி, இன, பால் நிறவேறுபாடின்றிஅனைத்து மக்களுக்கிடையிலும் நடமாடும் உயிர்த்துடிப்பான பெயர்களாகும். நமது புண்ணிய பூமியில் எந்த மூலையில் எந்த ஊரில், எந்தத் தெருவில், எந்த இல்லத்தில் இராமனும் கிருஷ்ணனும் இல்லை? இப்பெயர்கள் பாரத மக்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் குறிக்கும் பெயர்களாக நமது உள்ளங்களில் இடம்பெற்றிருக்கின்றன. நிலை பெற்றிருக்கின்றன. இராமன் இமயத்தின் அடிவாரத்தில் உள்ள அயோத்தியில் பிறந்து வளர்ந்து, தெற்கு நோக்கி இலங்கை வரை நடந்தே சென்று தனது அவதாரக்கடமைகளை நிறைவேற்றி நந்தி கிராமத்தில் தியாகத்தின் உயர்ந்த வடிவமான பரதனின் நீதியான அரசியல் நிர்வாகத்திற்கு வழி வகுத்துக் கொடுத்துவிட்டு குகனையும் சுக்கிரீவனையும் வீடணனையும் தனது உள்ளத்தால் அன்பால் அரவணைப்பால் வென்று அவர்களைத் தனது சகோதரர்களாக உடன் பிறப்புகளாக அரவணைத்துக் கொண்டு பாரதத்திருநாட்டை சிந்தனையில் ஒன்றாக ஒன்றுபடுத்திய மகத்தான பண்டய வரலாற்றியல் பண்பாட்டில் பாரதி க்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது. ஆயினும் பாரதி நூல்களையும் கவிதைகளயுைம் ஆழ்ந்து படிக்கும் போது அவனுக்கு பாரதக் கதையிலும் அதன் தெய்வீகப் பாத்திரங்களிலும் எல்லாவற்றிற்கும் மேலாகக் கண்ணனிடம் மிகுந்த பற்றும் பாசமும் ஈடுபாடும் ஏற்பட்டிருப்பதைக் காண்கிறோம். s,৫তষ্ঠা তেতা Gঠf Gঠা எண்ணற்ற அனந்தமான வடிவங்கள் பாரதியை மயக்கியிருக்கிறது. பாரதி, தான் கண்ட உணர்ந்த அனுபவித்த சிந்தித்த அனைத்திலும் தான் வாழ்ந்த உழைத்த நடந்த கவிதைகளை எழுதிய பாடிய அனைத்து நிலைகளிலும் கண்ணனைக் கண்டிருக்கிறான். பாரதி தான் கண்ட அனைத்து உயிர்ப்பொருள்களையும் ஜடப்பொருள்களையும் மனிதர்களையும் மக்களையும் பஞ்சபூதங்களையும் அவைகளின் பகுதிகளையும் அவைகளின் அசைவுகளையும் செயல்பாடுகளையும் வளர்ச்சி நிலைகளையும் கண்ணனாகவே கண்டு மகிழ்ச்சி அடைந்து ஆனந்தக் கூத்தாடியிருக்கிறார். பாரதியின் கண்ணன் உலகப் பெருவடிவத்தின் உலகப் பெருவடிவம். விஸ்வரூபத்தின் விஸ்வரூபம். துரியோதனனுடைய வேண்டுதலின் பேரிலும் தூண்டுதலின் பேரிலும் சகுனி தனது சூழ்ச்சி முறையால் திருதராட்டிரனிடம் போய் பாண்டவர்களை மறுவிருந்துக்கு அழைக்கவும் சூதாட்டத்திற்கு ஏற்பாடு செய்யவும் சம்மதிக்கும்படியும்.அதற்கான அனுமதிகளை வழங்கும்படியும் ஆனைகளை இடும்படியும் வாதிடுகிறான். திருதராட்டிரன் எத்தனையோ புத்திமதிகளைக் கூறி சகுனியைத்திருத்த முயலுகிறான். பாரதி இதைத்தனது அற்புதமான கவிதை வரிகளில் எடுத்துக் கூறுகிறார்.