பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 80 "சோதரர்தம்முட்பகையுண்டோ? - ஒரு சுற்றத்திலே பெருஞ்செற்றமோ? தம்மில் ஆதரங்கொண்டவரல்லரோ - முன்னர் ஆயிரம் சூழ்ச்சியிவன் செய்தும்- அந்தச் சீதரன்தன் அருளாலும் ஓர் - பெருஞ் சீலத்தினாலும் புயவலி - கொண்டும் யாதொரு திங்கும் இலாமலே - பிழைத் தெண்ணருங்கீர்த்தி பெற்றாரன்றோ? என்று திருதராட்டிரன் சகுனியிடம் கூறுவதைப்பாரதி குறிப்பிடுகிறார். யாதொரு தீங்குமில்லாமல் பிழைக்கவும் அரும் கீர்த்தி பெறவும் நல்வாழ்வும் புகழும் பெற கண்ணனுடைய தண்ணருள் அத்துடன் பெரும் சீலம் (சிறந்த குணநலன்கள்) புயவலி (வல்லமை) ஆகியவற்றின் அவசியத்தையும் அவற்றைப் பாண்டவர் பெற்றிருந்தது பற்றியும் பாரதி அவ்வரிகளில் குறிப்பிட்டிருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். கண்ணனுக்கு முதல் மரியாதை செய்ததைக்குறை கூறிப் பேசிய சகுனியின் வார்த்தைகளுக்கு பதில் கூறும் முறையில் திருதராட்டிரன் கூறிய வாசகங்கள் வார்த்தைகள் கண்ணனைப் பற்றி பாரதி கொண் டி ரு ந் த மிக உயர் வான கருத்து க் க ைள வெளிப்படுத்துகின்றன. "ஆதி பரம்பொருள் நாரணன் - தெளி வாகிய பாற்கடல் மீதிலே - நல்ல சோதிப் பனாமுடியாயிரம் - கொண்ட தொல்லறிவென்னுமோர் பாம்பின் மேல் - ஒரு போதத்துயில் கொளுநாயகன் - கலை போந்து புவிமிசைத் தோன்றினான்-இந்தச் சீதக்குவளை விழியினான் - என்று செப்புவர் உண்மை தெரிந்தவர். "நானெனும் ஆணவம் தள்ளலும் - இந்த ஞாலத்தைத் தானெனக் கொள்ளலும் - பர மோன நிலையினடத்தலும் - ஒரு மூவகைக் காலங்கடத்தலும் - நடு வானகருமங்கள் செய்தலும் - உயிர் யாவிற்கும் நல்லருள் பெய்தலும் - பிறர் ஊனைச் சிதைத்திடும் போதிலும் - தன துள்ள மருளினெ குதலும்."