பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 81 "ஆயிரங்காலமுயற்சியால் - பெற லாவரிபேறுகள் ஞானிகள் - இனை தாயின் வயிற்றிற் பிறந்தன்றே - தமைச் சார்ந்து விளங்கப் பெறுவரேல் - இந்த மாயிரு ஞாலம் அவர்தமைத் - தெய்வ மாண்டுடையார் என்று போற்றுங்காண் - ஒரு பேயினை வேதம் உணர்த்தல் போல் - கண்ணன் பெற்றி உனக்கெவர் பேசுவார் என்று திருதராட்டிரன் கூறுவதாகப் பாரதி பாடியுள்ள பாடல்கள் மிகச்சிறந்த தத்துவ ஞானக்கருத்துக்களைக் கொண்டதாக உள்ளது. ஆழ்வார்களின் பல பாசுரங்களுக்கு ஈடாக இந்த வரிகள் அமைந்துள்ளதைக் காண்கிறோம். திரெளபதி நீதி கேட்டு வாதிட்டாள் : பாரத நாட்டின் வரலாற்றில் கதைகளில் இதிகாசங்களில் காப்பியங்களில் காவியங்களில் நீதி கேட்டு வாதிட்ட நியாயத்திற்காகப் போராடடிய விராங்கனைகள் பலர் உண்டு. ஜானகி அசோகவனத்தில் சத்திய விரதம் இருந்து அநியாயத்தை எதிர்த்தாள். இலங்கேஸ்வரனை எதிாத்து அவனுக்கு புத்திபுகட்டிவாதிட்டாள். தனது கற்பு நிலையைக் காத்துச் சிறையில் இருந்தாள். "வில் பெருந்தடந்தோள் விர விங்கு நீர் இலங்கை வெற்பில் நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேன்.அல்லேன் இற்பிறப்பு என்பது ஒன்றும் இரும்பொறை என்பது ஒன்றும் கற்பெனும் பெயரது ஒன்றும் களிநடம் புரியக் கண்டேன்" என்பது கம்பன் குறிக்கும் பாடல், நற்பெரும் தவத்தளாயநங்கை இற்பிறப்பு இரும்பொறை கற்பு என்னும் பெயர் கொண்ட நங்கையாக சீதையை அனுமன் குறிப்பிடுகிறான். பின்னர் அந்தக் கற்பு எனும் பெயர் கொண்ட நங்கை தனது கணவனது விரத்தால் சிறை மீண்டாள். கண்ணகி, அநியாயமாகத்தனது கணவன் கொல்லப்பட்டதை எதிர்த்து பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு வழக்காடி நீதியை நிலைநாட்டி மதுரைநகரையே எரித்தாள். பாஞ்சாலி நீதி கேட்டு பெரியோர் சபையில் வாதிட்டாள். முதலில் தனது கணவர்களிடம் அம்மிமிதித்து அருந்ததி காட்டி அக்கினி சாட்சியாக மனம் செய்து இந்தப் பாதகர் முன்பு இப்படி அவமானப்படும் படி ஏன் விட்டீர்கள் எனக் கேட்கிறாள். விஜயனும் வீமனும் நெஞ்சு குமுறி நின்றனர். தருமன்தலை குனிந்து நின்றான்.