பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 83 பாஞ்சாலி சூ தோர் சபையில் வாதிட்டு அலரிய இந்த அவலக்காட்சியில் அடுத்த திருப்பம் பெண்ணடிமை பெண்ணுரிமை பற்றிய ஒரு கடும் வாதம் பிதாமகர் வீட்டுமனுக்கும் பாதிக்கப்பட்ட பாஞ்சாலிக்கும் நடக்கிறது. இந்த வாதத்தில் பாரதியின் உள்ளத்தைக் காணலாம். விட்டுமன் கூறும் சாத்திரவாதமும் அதற்கு பதிலளித்து பாஞ்சாலி கூறும் சத்தியவாதமும் உரிமைக்குரலும் பதில் வாதமும் வீமனின் துடிப்பும் விஜயனின் சத்தியக்குரலும் பாட்டனுக்கு பதிலளித்து விகர்ணன் கூறிய மறுப்புகளும் மரபு வழியில் விவாதிக்கப்பட்ட ஒரு பேரிலக்கியமாகும். பாரதியின் தனித்தன்மை பெற்ற இந்தப் பேரிலக்கியம் தலைசிறந்த இந்தக் காவியத்தின் மய்யமான கருத்தாகவும் அமைந்துள்ளது. இந்த மரபுகளை பண்பாடுகளை மீறி துகிலுறிதல் கொடுமை நிகழ்கிறது. கண்ணனின் கருணை மழை கண்டோரை வியக்கச் செய்யும் அதி அற்புத நிகழ்ச்சியாக அமைகிறது. கொடுமையை எதிர்த்து பழிக்குப் பழி சபதங்களாக எழுகின்றன. அச்சபதங்கள் பெரும்போருக்கு வித்தாகிறது. போர்விழைகிறது. சபதம் நிறைவேறுகிறது. காலம்காலமாக யுக யுகாந்திரமாக பாரத மக்கள் இந்த வீரக் கதை க ைள க் கேட் டு க் கே ட் டு திரும்பத்திரும்பக்கேட்டு தெவிட்டாத சிந்தனை வளமும் நீதி நெறியும் பெற்று பாரத சமுதாயம் சிரஞ்சீவியாக எத்தனை இன்னல்கள் வந்துற்றாலும் அவைகளைத் தாங்கி நின்று முன்சென்று கொண்டு வருகிறது. "தகுதியுயர் வீட்டு மனும் சொல்லுகிறான்" எனத் தனது வாதங்களைப் பிதாமகர் தொடங்குவதை பாரதி குறிப்பிடுகிறார். சபையில் மூத்தவர் பிதாமகர் வீட்டுமன். பாண்டவருக்கும் கவுரவர்களுக்கும் பாட்டன். சகல வேதங்களையும் சாத்திரங்களையும் நீதி முறைகளையும் கற்றறிந்தவர். ராஜ நீதியையும் அரசியல் நெறிமுறைகளையும் பற்றி முற்றிலும் தெளிவாக அறிந்தவர். போரில் வல்லவர். யாராலும் வெல்ல முடியாத வல்லமை மிக்கவர். தனக்குத்தானே விரும்பாமல் அவருக்கு மரணம் நேராது என வரம் பெற்றவர். அத்தினாபுரத்தைக் கடைசிவரை தனது வலிமையால் பேணிக்காக்கக் கங்கணம் பூண்டவர். நியாயம் எது அநியாயம் எது என்பதையும் தர்மம் எது அதர்மம் எது என்பதையும்தெரிந்தவர். என்றாலும் திருதராட்டிரன் புத்திரபாச த்தால் துரியோதனனுடைய வற்புறுத்தலுக்கு இணைங்கியதைப் போல அத்தினாபுரத்து நாட்டு விசுவாசத்தால் கவுரவர்களின் செயல்களுக்கு துணைபோகும் சூழ்நிலைக்கு வீட்டுமனார் கட்டுப் பட்டு நின்றாரோ? எந்தத் தன்னலமும் இல்லாமல் யாரை நம்பியும் இல்லாமல் அறத்தின் பால் நின்று நீதி கூறுவதற்கு எல்லாத்தகுதிகளையும் படைத்திருந்த பிதாமகர் வீட்டுமனார் நியாயத்தின் பக்கம் நிற்காமல் போனது ஏன்?