பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 89 "அச்சோ தேவர்களே - என்று அலரி அவ்விதுரனும் தரை சாய்ந்தான்" இந்த அவலக்காட்சியை கொடுமையின் கொடுமுடியைக் காண சகிக்க முடியாமல் மகாத்மா விதுரன் மயங்கி விழுந்தான் என்பதைப் பாரதி குறிப்பிடுகிறார். "பிச்சேறியவனைப் போல - இந்தப் பேயனும் துகிலினை யுரிகையிலே உட்ஜோதியில் கலந்தாள் - அன்னை உலகத்தை மறந்தாள் - ஒருமையுற்றாள். பாஞ்சாலி, ஹரி, ஹரி, என்றாள் - கண்ணா, கண்ணர், .556לסrgחזהד என்று அ பயக் குரல் கொடுத் தாள். அவள் இரு கை களையும் உயரத்துக்கினாள். தன்னை மறந்தாள். உலகை மறந்தாள். தெய்வத்துடன் ஒருமையுற்றாள், என்று பாரதி கூறும் இந்தக் காட்சியில் கண்ணனை, அவன் பெருமையை, அவன் அருளை, அவனது மகிமையை, கண்ணனது முழுமையான காட்சியை அவனது அருஞ்செயலை, தனது கவிதைகளில் முன்வைக்கிறார். கண்ணனது பெருமையைக் குறிக்கும் இந்தப் பாடல்கள் பாரதி பாடல்களிலும் குறிப்பாக பாஞ்சாலி சபதத்திலும் ஒரு தனித்தன்மையான பக்தி இலக்கியப் பாடல்களாகும். கண்ணன் பாட்டுக்கு அடுத்தாற் போல கண்ணன் பெருமையைக் கூறும் பாடல்களைப் பற்றி ஏற்கனவே திருதராட்டிரன் கூறியதைக் குறிப்பிட்டுள்ளோம். இங்கு பாஞ்சாலிக்கு அருள் புரிந்து அவள் மானத்தைக் காக்கும் கண்ணன் பாரதத்தின் மானத்தையும் காப்பான் என்னும்பக்தி உணர்வோடு பரவசமாகப்பாடும் பாடல்களாகும். "ஹரி, ஹரி, ஹரி என்றாள் - கண்ணா அபயம். அபயமுனக்கபயம் என்றான் கரியினுக்கருள் புரிந்தே - அன்று கயத்திடை முதலையினுயிர் மடித்தாய், கரிய நன்னிற முடையாய் - அன்று காளிங்கன் தலைமிசை நடம்புரிந்தாய் பெரிய தோர் பொருளாவாய் - கண்ணா பேசரும் பழமறைப் பொருளாவாய் சக்கரமேந்தி நின்றாய் - கண்ணா சார்ங்கமென்றொரு வில்லைக் கரத்துடையாய்,