பக்கம்:பாரம்பரியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பாரம்பரியம் ஒருத்திக்கு யாரும் கற்றுக்கொடுக்காமலேயே பாடுக்கிறமை யிருக்கின்றது. மற்றவர்களுக்குப் பாட்டே வாாது. மேலும் ஒரு சகோதான் தாாளமாக என்னுடன் பழகின்ை: வேடிக்கையாகப் பேசிப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தான். மற்ருெருவன் பேசுவதே கிடையாது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது திறமையும் கன் மையும் பிறப்பிலேயே அமைகின்றனவா அல்லது சூழ்நிலை யாலும், பயிற்சியாலும் ஏற்படுகின்றனவா என்ற சந்தே கம் உண்டாயிற்று. பிறப்பிலேயே அமைந்திருந்தால் ஒரே தாய் தந்தையருக்குப் பிறக்கும் குழந்தைகள் அனைவருக் கும் ஒரே மாதிரியான திறமையும் தன்மையும் இருக்க வேண்டுமல்லவா? அவ்வாறில்லாமல் இவ்வாறு மாறுபட் டிருப்பதற்குக் காரணம் என்ன? மேலும், என் நண்பனு டைய பெற்ருேர்களும் அவர்களுடைய மூதாதையர்களும் கல்வியறிவு அதிகமில்லாத விவசாயிகள். அவர்கள் குடும் பத்தில் எழுத்துக் கலையிலும், இசைக்கலையிலும் திறமை வாய்ந்த மக்கள் இருக்கிருர்களென்ருல் பிறவியிலேயே திறமைகள் அமைவதாக எங்கனம் கூற முடியும்? அப்படியல்லாமல் சூழ்நிலையாலும் பயிற்சியாலும் அவைகள் அமைவதாகக் கொண்டால் அது இக்குடும்பத் தைப் பொருத்த வரையில் சரியாக இருக்குமா? இம் மாதிரியாகப் பல கேள்விகள் என் மனதிலே தொடர்ந்து எழுந்தன. அவை என் மனதைவிட்டு நெடுநாள் வாையி லும் நீங்கவே இல்லை. அதனல் மக்களுக்குத் திறமைகளும் தன்மைகளும் பிறவியிலேயே பாரம்பரியமாக அமைகின் றனவா, அல்லது சூழ்நிலையால் ஏற்படுகின்றனவா என்று விரிவாக ஆராய வேண்டுமென்ற ஆசையுண்டாயிற்று. பல உளவியல் அறிஞர்கள் இதைப்பற்றி ஆராய்ந்து எழுதி யிருக்கிருர்கள். ஆனல் அவர்களுக்குள்ளே ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/13&oldid=820402" இலிருந்து மீள்விக்கப்பட்டது