பக்கம்:பாரம்பரியம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பாரம்பரியம் கள். சூழ்நில்ை என்று சொல்லுகிறபோது அதிலே வளர்க் கும் முறை, பயிற்சி, அனுபவம் ஆகியவற்றை யெல்லாம் சேர்த்தே அவர்கள் குறிப்பிடுகிரு.ர்கள். இவற்றை யெல் லாம் ஏற்றiர்ம அம்ைப்பதன் மூலம் விருப்ப்ம் போலச் திறமைகள்ே உண்டாக்கி விடலாம் என்பது அவர்கள் கம்பிக்கை, இது சரிதான் என்று பூரணமாக விற்றுக்கொள்ள முடியாது என்ப்து வேறு சிலருடைய அபிப்பிராயம். சூழ் கிலையாலும், விடா முயற்சியோடு கூடிய பயிற்சியிலுைம் ஒருவனுக்கு விருப்பமான துறையிலே ஒரளவிற்குத் திற மையை அடையலாமாயினும் பாரம்பரியமே பெருமையின் எல்லையை வகுக்கின்றது என்று அவர்கள் சொல்லுகிருர் கள். ஆனல் சூழ்நிலையும் பயிற்சியும் உதவி புரியாவிடில் பாரம்பரியத்தால் அமைந்த எத்தத் திறமையும் அதன் முழு அளவிற்கு மலாாது என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்ளுகிருர்கள். குழந்தையின் ஜனன காலத்திலே கிரகங்களின் கிலை எவ்வாறு இருக்கின்றதோ அதைப் பொருத்து அக் குழங் தையின் திறமைகளும் தன்மைகளும் அமைகின்றன என்று சோதிட நூல் கூறுகின்றது. அவ்வாறு அமைவதற்கு முக்கியமாக முற்பிறப்புக்களில் செய்த வினையே காான மென்றும் கூறுகிருர்கள். கருவிண்டாவதற்குக் காரணமா கிய கலவி நிகழ்கின்ற காலத்தில் தாய் கந்தையரின் உள் ளங்களிலெழுந்த எண்ணங்களின் தன்மைக் கேற்பக் குழந்தையின் பாரம்பரிய இயல்பு அமைகின்றது என்றும் சிலர் கூறுகிருர்கள். அதனுல்தான் குழந்தைப்பேறை ஒரு உயர்ந்த கடமையாகக் கருதி சல்வேளையில், நல்லெண்ணங் களுடன் கலவிகிகழ வேண்டுமென வற்புறுத்தப்படுகிறது. சிசுவானது கருப்பையிலே வளர்கின்ற காலத்திலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/15&oldid=820404" இலிருந்து மீள்விக்கப்பட்டது