பக்கம்:பாரம்பரியம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுக் கருத்து 拉 தாயின் எண்ணங்கள் அதைப் பாதிப்பதாகச் சொல்லு கிருர்கள். ஆனல் இவற்றை யெல்லாம் விஞ்ஞான முறையில் சோதனை செய்து உண்மைகாண இயலாது. எண்ணத்திற்கு வலிமையுண்டு என்று நாம் பொதுவாக நம்பலாமாயினும் அதைப்பற்றிய சோதனை எளிதிலே கைகூடுவதன்று. விஞ்ஞான முறையையும், அதன் முடிவுகளையுமே ஒப்புக் கொள்ளுகின்ற மக்களுக்கு இந்த நம்பிக்கை உதவியாக இாாது. பாாம்பரியம், சூழ்நிலை ஆகியவற்றின் இயல்புகளே விரிவாகச் சோதனை செய்து காண்பதற்காக ராக்பெல்லர் ஸ்தாபனம் நீண்ட காலக் கிட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜாக்சன் ஞாபகார்த்த ஆராய்ச்சிச் சாலையிலே ஏராளமான பொருட் செலவில் இது பற்றிய சோதனை நடந்து வருகிறது. மனித வர்க்கம் விரைவிலே பெருகுவதில்லை யாதலாலும், மக்களைச் சோதனைக்குட் படுத்துவது எளிதல்ல வாதலாலும் நாய் முதலிய பிராணி களைக் கொண்டே ஆராய்ச்சி நடைபெறுகின்றது. அவ் வாாாய்ச்சிச் சாலையின் அதிபரான டாக்டர் லிட்டில் என்ப வர் கூறுகிருர் : "பாாம்பரியமோ, சூழ்நிலையோ மற்றதன் உதவியின்றித் தனித்து நின்று சிறந்த பயனை அளிக்காது. ஒவ்வொன்றும் மற்றதைச் சார்ந்தே கிற்கின்றது. அவை இசண்டின் கலப்பில் விளக்ததே காம் காணும் மனித வாழ்க்கையாகும்." இவ்வாறு அவர் பொதுப்படையாகக் கூறுகின்ருர். பல உளவியல் அறிஞர்களும் மெதுவாக இம் முடிவுக்கே வந்து கொண்டிருக்கிருர்கள். அவர்கள் அவ்வாறு முடி விற்கு வருவதற்குக் காரணமான சில உண்மைகளே இனி நாம் கவனிப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/16&oldid=820405" இலிருந்து மீள்விக்கப்பட்டது