பக்கம்:பாரம்பரியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பாரம்பரியம் பர் ஒருவர் நல்ல கிரிக்கட் விளையாட்டுக்காரர். அவரிடம் விசாரித்தேன். அவர், ' என் தந்தை ஆங்கிலக் கல்லூரி யில் பயின்று ஒரு பிரபல வக்கீலாக வன்தார். ஆனல் அவர் கிரிக்கட் மட்டையைத் தொட்டதே இல்லை” என்று கூறி ஞர். இத்ைக் கவனித்துப் பார்த்தால் பாம்பரியத்தின் தொடர்பு எளிதில் புலப்படுவதில்லை. கிரிக்கட் விளையாட் டில் சிறந்திருப்பவரின் மக்களும் அவ்விளையாட்டில் சிறக் திருப்பதாக நாம் காண்பதில்லை. இவற்றையெல்லாம் கோக் கும்போது பாாம்பரியத்தால் ஏற்படும் திறமைகளைப்பற்றி அதிநுட்பமாகவும், விரிவாகவும் ஆராய வேண்டுமெனத் தோன்றுகிறது; மேற்போக்காகக் கவனிப்பதால் எவ்வித முடிவுக்கும் வாமுடியாது என்றும் தெரிகிறது. உடல் அமைப்பிலுங்கூட மேலே கூறியவாறு எளி தாகக் குழந்தைகள் அனைவரிடத்திலும் பாாம்பரியச் சாய லைக் காண்பது கடினம். தங்தை கறுப்ப்ாகவும், தாய் தங்க கிறமாகவும் இருந்தால் குழங்தை எந்த நிறத்தோடிருக்கும் என நிச்சயமாகக் கூற முடியாது. தங்தையைப் போலக் கறுப்பாக இருக்கலாம்; அல்லது காயைப்போலத் தங்க நிறமாக இருக்கலாம். அல்லது அவ்விரு கிறங்களுக்கு மிடையே பல வகையான கலவைகளாகவும் இருக்கலாம். இதைப்போலவே மற்ற உறுப்புக்களைப் பற்றியும் கூற முடியும். ஆகலால் பாரம்பரியமாக வரும் உடலமைப்பு, தன்மை, திறமைகளைப்பற்றி அறிந்துகொள்வதற்கு மிக நுணுக்க மான ஆராய்ச்சி அவசியமாகின்றது. கருவுண்டாவதற்குக் காரணமாயுள்ள விந்தணு (Sperm), அண்டம் (Ovum) இவைகளைப்பற்றியும் விரிவாக அறிந்துகொள்ள வேண்டிய தும் அவசியமாகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/19&oldid=820408" இலிருந்து மீள்விக்கப்பட்டது