பக்கம்:பாரம்பரியம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சியின் அவசியம் 罗 மேலும், சுரப்பிகளின் (Glands) தன்மையை ஒட்டிப் பாாம்பரியத்தை ஆாய்வதும் உண்டு. மனித யாக்கை யிலே வெவ்வேறு ப்ாகங்களிலே பல சுரப்பிகள் இருக் கின்றன. ஒவ்வொன்மம் ஒருவகையான ைோச் சுரக் கின்றது. அந்தச் சுரப்பி நீர் உடல் வளர்ச்சிக்கும் காான மாகின்றது. அதைப் பொருத்தே உயரம், உடற்கட்டு, சுபாவம் எல்லாம் அமைவதாகப் பல ஆராய்ச்சிகளிலிருந்து கண்டிருக்கிருர்கள். உதாரணமாகக் கழுத்தின் அடிப்பா கத்திலே சுவாசக் குழாய்க்கு இரு பக்கத்திலும் இருக்கும் கேடயச் சுரப்பி (Thyroid gland) யிலிருந்து சுரக்கும் நீர் போதுமான அளவில் இல்லாவிடில் மனிதன் குள்ளமாக வும், சுறுசுறுப்பற்றவனுகவும் இருப்பான் என்றும், அள வுக்கு மிஞ்சி அதிலிருந்து நீர் சுரந்தால் மனிதன் சிறு சம் பவங்களைக் கண்டும் அவைசியமாகக் கொதிப்பும் ஆத்திர மும் அடைவான் என்றும் கண்டிருக்கிரு.ர்கள். இம்மாதிரியான சுரப்பிகளின் அமைப்பு பிறவியி லேயே ஏற்படுவதாகச் சொல்லுகிருர்கள் ஆனல் அவற் றைக் கொண்டும் ஒருவனுக்கு எவ்வகையான கலைத் திறமை உண்டாகுமென்று கூறிவிட முடியாது. ஏனென் முல் இசைக்கென்று ஒரு தனிச் சுரப்பியோ, ஒவியத்திற் கென்று ஒரு தனிச் சுரப்பியோ மனிதயாக்கையில் இல்லை. பிறவியால் அமைந்த சுரப்பிகளின் தன்மை எவ்வாறு கலைத் திறமைக்கும் தன்மைகளுக்கும் உதவுகின்றன் என் பதையும் நாம் நன்கு ஆராயவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/20&oldid=820409" இலிருந்து மீள்விக்கப்பட்டது