பக்கம்:பாரம்பரியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனு ¤? இவற்றிற்கெல்லாம் என்ன காரணம் என்று அறிந்து கொள்ளுவது அவ்வளவு சுலபமல்ல. இருந்தாலும் அதை காம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதன் மூலமாக மனித வர்க்கத்தின் பாாம்பரியத் தன்மைகள் எவ் வாறு அமைகின்றன என்பதையும் ஒரளவிற்கு ஊகித்து அறிந்து கொள்ளலாமல்லவா ? * சிவப்பு நிறமுள்ள அங்கி மல்லிகையும், வெள்ளே கிற முள்ள அந்தி மல்லிகையும் சேர்வதால் வெண் சிவப்பான பூக்கள் உண்டாவதையும், அவ் வெண்சிவப்புப் பூக்கள் தமக்குள்ளேயே கலப்பதால் சிவப்பு, வெண்சிவப்பு, வெள்ளே ஆகிய மூன்று நிறங்களுள்ள பூக்கள் உண்டாவ தையும், முன்னுல் பார்த்தோம். கா.ொலிக்கும் வெள்ளெ லிக்கும் பிறப்பது காரெலிகளாக இருப்பதையும், ஆனல் அப்புதிய காரெலிகளின் குட்டிகளில் பல கருமை நிறமுட லும், ஒரு சில வெள்ளே நிறமுடனும் இருப்பதையும் முன்பே கவனித்தோம். இம்மாதிரியெல்லாம் உண்டாவதின் காரணத்தை அறிய வேண்டுமானுல் உயிர் வாக்கத்தைப் பொருத்த சில உண்மைகளை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். உயிருள்ள ஒவ்வொரு பொருளும் அணுக்களால் (cells) ஆக்கப்பட்டிருக்கின்றன. மாம் செடி கொடிகளையும் பிராணிகளையும் போலவே மனிதனும் இவ்வனுக்களா லேயே ஆக்கப்பட்டிருக்கிருன். முதலில் ஒரு அணு இருக் கிறது. அது இரண்டாகப் பிரிந்து இரு அணுக்கள் ஆகின் றன. அவை மறுபடியும் பிரிகின்றன. இவ்வாறு அணுக் கள் தாமே பிரித்து பிரிந்து பெருகுகின்றன.அவற்றின் தொகுதியாகவும், அவற்ருல் உண்டாக்கப்பட்ட எலும்பு போன்ற பாகங்களாலும் உயிர்ப் பொருள்கள் உருவாகின் றன. ஆதலால் முதலில் நாம் இவ்வணுக்களைப்பற்றி 2 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/28&oldid=820417" இலிருந்து மீள்விக்கப்பட்டது