பக்கம்:பாரம்பரியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டம் - விந்தணு உயிர்ப் பொருள்களெல்லாம் அணுக்களால் ஆக்கப் பட்டிருக்கின்றன என்று கண்டோம். ஆதலால் பாரம்பரியத் தன்மைகள் அமைகின்றனவென்ருல் இவ் வனுக்களின் மூலமாகத்தான் ஏற்படவேண்டும். பாரம்பரி யத்திற்கும் இவ்வணுக்களுக்கும் முக்கியமான தொடர்பு இருக்கின்றது. மனித தேகத்தின் கிறம் பிறவியிலேயே அமைகிறது. ஒரளவிற்கு அது சூழ்நிலையால் மாறுபடலா மெனினும் முக்கியமாகப் பாரம்பரியத் தன்மையையே கொண்டிருக்கும். இங்கிறமானது மேல் தோலின் அடிப் பாகத்திலுள்ள சில அணுக்களில் நிறத்திற்குரிய வஸ்து சேர்ந்திருப்பதாலேயே ஏற்படுகிறது. இது போலவே, கலை மயிர், எலும்பு முதலியன அமைவதும் அணுக்களைப் பொருத்தே இருக்கின்றன என்பதை அறியலாம். தேகத்தி லுள்ள உறுப்புக்களே உருவாக்குவதில் சுரப்பிகளும் உதவி செய்கின்றன. நமது உடம்பிலே பலவேறு பாகங்களில் பல வகையான சுரப்பிகள் இருக்கின்றன. கேடயச் சுரப்பி என்பது கழுத்திலே இருக்கிறது. அது உடல் வளர்ச்சிக் குத் துணை புரிகிறது என்று முன்பே கண்டோம். இச் சுரப்பி சரியானபடி வேலை செய்யாவிடில் மனிதனுடைய உயரம் குறைந்து விடுமாம். இம்மாதிரி பல சுரப்பிகள் உடல் வளர்ச்சிக்கு உதவி செய்கின்றன; மனிதனுடைய தன்மை திறமைகளுக்கும் காரணமாகின்றன. என்ருலும் அவைகளெல்லாம் அணுக்களாலேயே ஆக்கப்பட்டிருக்கின் றன. அச்சுரப்பிகள் நன்கு வேலை செய்வதும் அவ்வனுக் களைப் பொருத்தே இருக்கின்றது. ஆதலால் அணுக்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/30&oldid=820420" இலிருந்து மீள்விக்கப்பட்டது