பக்கம்:பாரம்பரியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டம்-விந்தணு 21 ஆகவே உயிர்ப் பொருள்களுக்குக் காரணம் அணுக் கூட்டங்கள் என்றும், அவ்வனுக்கள் பூரித்த அண்டமாகிய முதல் அணுவிலிருந்து பெருகியவை யென்றும், ஆரித்த அண்டத்திற்குக் காரணம் பெண் கொடுத்த அண்ட மும் ஆண் கொடுத்த விக்கனுவும் என்றும் தெரிகின்றன. அண்டம் என்பது ஒரு அணு, விந்தனுவும் ஒரு அனுவே. இவை இரண்டும் சேர்ந்து பூரித்த அண்டமான ஒரே அணுவாகிவிடுகின்றன. அண்டமும் விந்தணுவும் மிக நுட்பமானவை; கண் ளுல் கோாகப் பார்த்து அறியக் கூடாதவை. அவைகளே பெற்ருேர்க்கும் குழந்தைகளுக்கும் தொடர்பை உண் டாக்குவன; அவைகளின் மூலமாகவே பாாம்பரியத் தன்மைகள் வழி வழியாக அமைய வேண்டும். ஆதலால் அண்டம் விந்தனு இவற்றின் முக்கிய பாகங்களைப்பற்றி நாம் ஆராய்ந்து அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். இவ்வணுக்கள் மிக நுண்ணியவையாக இருப்பதால் அவற்றைப்பற்றி வெகுகாலம் வரை விரிவாகத் தெரிந்து கொள்ள இயலாமலிருந்தது. பொருள்களைப் பல ஆயிச மடங்கு பெரிதாக்கிக் காட்டும் மைக்ராஸ்கோப் என்னும் பூதக்கண்ணுடி முதலிய சாதனங்கள் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே அவற்றின் முக்கிய அம்சங்களைப் பிரித்து அறிந்து கொள்ள முடிந்தது. அண்டத்தையும் விந்தணு வையும் பன்மடங்கு பெரிதாக்கிக் காட்டும் சாதனங்களே உபயோகித்துப் பார்த்த போது அவற்றிலே கிறக்கோல்கள் (Chromosomes) என்று சொல்லும்படியான நுண்ணிய பொருள்கள் இருப்பதை உணர்ந்தார்கள். அண்டமும் விக்கனுவும் உண்டாகும் வகை, கிறக்கோல்களின் அமைப்பு, தன்மை, அவை மூலம் பாரம்பரியம் வழிவழி வருதல் முதலியவற்றைப்பற்றி இனிமேல் ஆராய்வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/32&oldid=820422" இலிருந்து மீள்விக்கப்பட்டது