பக்கம்:பாரம்பரியம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜீன் பூரித்த அண்டம்தான் கருவாகவளர்ச்சி அடைகின் றது என்றும் அந்த அண்டத்தில் உள்ள கிறக்கோல் களில் 24 ஆணிடத்திலிருந்தும், மற்ற 24 பெண்ணிடத்தி லிருந்தும் கிடைத்தவை யென்றும் தெரிந்துகொண்டோம். இந்த நிறக்கோல்கள் தான் பாரம்பரியத் தன்மைகளுக்குக் காரணமாக அமைகின்றன. ஆதலால் அவற்றைப்பற்றி விரிவாக ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒவ்வொரு கிறக்கோலும் மிக நுண்ணிய ரப்பர் நூல் துண்டம் போல இருக்கிறதென்று முன்பே கண்டோம். இந்த நிறக்கோல்களில் பாரம்பரியத் தன்மையைத் தாங் கிக் கொண்டிருக்கும் மிக மிக நுட்பமான அங்கங்கள் இருக்கின்றன. அவற்றைத்தான் ஜீன்கள் (Genes) என்று சொல்லுகிருர்கள். ஜீன்களின் கூட்டத்தாலேயே நிறக் கோல்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன. ஆனல் ஜீன்களைத் தனியாகக் காண்பது அரிது. ஜீன்கள்தான் பலவகையான தன்மைகளுக்கும், அங்க அமைப்பிற்கும் காரணமாக இருக்கின்றன என்று பொது வாக நாம் யூகிக்கலாம். அவற்றின் இயல்பைப்பற்றி முற் றிலும் வரையறுத்துக் கூறுவது மிகக் கடினமான காரியம் என்ருலும் அவற்ருல் எற்படுகின்ற பல தன்மைகளைப் பற்றி ஆராய்ந்து கண்டிருக்கிருர்கள். அதற்கு முக்கிய உதவியாக இருந்தது ஒரு வகையான ஈயாகும் (Fruit Fly). 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/44&oldid=820435" இலிருந்து மீள்விக்கப்பட்டது