பக்கம்:பாரம்பரியம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறத் தோற்றம் ஒரு வகையான அங்கி மல்லிகை வெள்ளைநிறமான பூக் களைப் பூக்கிறது. மற்ருெரு வகை சிவப்பு நிறமான பூக் களைப் பூக்கிறது. இவை இாண்டையும் கலப்பினமாகும்படி சேர்க்கை .ெ ச ய் த ல் வெண்சிவப்பு நிறமுள்ள பூக்களேத் தரும் செடி தோன்றுகிறது. அவ்வாறு தோன் றிய வெண்சிவப்புப் பூவையுடைய அந்தி மல்லிகையை அதன் இனத்தோடேயே சேர்க்கை செய்தால் உண்டா கும் செடிகளோ மூன்று வகைகளாக இருக்கின்றன. ஒரு வகை வெள்ளைப் பூவையும், மற்ருெரு வகை வெண் சிவப் பும் பூவையும், மூன்ரும் வகை சிவப்புப் பூவையும் கரு கின்றன. அவற்றிலேயும் ஒரு குறிப்பிட்ட விகிதம் காண் கிறது. அதாவது அவை முறையே 1: 2: 1 என்ற விகிதத் கில் இருக்கின்றன. வெள்ளையும் சிவப்பும் ஒவ்வொரு மடங்கு இருந்தால் வெண்சிவப்பு இருமடங்கு இருக்கிறது. ஏன் இவை இவ்வாறு அமைகின்றன என்று பார்ப்போம். நிறக்கோல்கள் ஜீன்களால் ஆக்கபபட்டிருக்கின்றன என்று நாம் தெரிந்து கொண்டோம். ஜீன்கள்தான்பாாம் பரியக் தன்மைக்குக் காரணமாக இருப்பவை. கண், தலை மயிர் முதலிய வெவ்வேறு உறுப்புக்களுக்கு ஜீன்கள் காரணமாக இருப்பது போல நிறத்திற்கும் அவையே காரணம். அந்தி மல்லிகைச் செடியின் கிறக்கோல்களில் நிறத்திற்குக் காரணமாக ஒரு ஜீன் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த ஜீனின் முக்கிய தன்மை என்னவென் முல் அது ஏதாவது ஒரு குறிப்பிட்ட கிறக்கோலில் ஒரு குறிப்பிட்ட பாகத்தில்தான் அமைந்திருக்கும். கலப்பினச் சேர்க்கை ஏற்படும்போது நிறத்திற்கு எதுவான ஜீன் என்னவாகின்றது என்று இப்பொழுது கவனிப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/48&oldid=820439" இலிருந்து மீள்விக்கப்பட்டது