பக்கம்:பாரம்பரியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பாரம்ப்ரியம் முதலில் கலப்பில்லாத ஒரு சுயமான வெள்ளைப் பூப் பூக்கும் அந்தி மல்லிகையை எடுத்துக் கொள்ளுவோம். அதன் உயிரணுவிலே பல நிறக்கோல்கள் இருக்குமல் லவா ? அவற்றையெல்லாம் உருவத்தில் ஒத்திருக்கும்படி யான ஜோடிகளாகப் பிரித்து வைக்கலாம் என்பதும் நமக்குத் தெரியும். அப்படி வைத்தால் ஒத்த ஜோடிகளிலே உள்ள இரு கிறக்கோல்களில் ஒன்று ஆண் தன்மையி லிருந்தும் மற்ருென்று பெண் தன்மையிலிருந்தும் கிடைத் தவையாகும். ஒவ்வொரு ஜோடியிலும் ஒரே மாதிரியான தன்மைக்குக் காரணமான ஜீன்கள் இருக்கின்றன. அதாவது ஒரு ஜோடியிலுள்ள இரண்டு கிறக்கோல்களி அம் ஒரே தன்மைக்குக் காரணமான ஜீன்கள் ஒரே அளவில் இருக்கும். கிறக்கிற்குக் காரணமாக ஒன்றில் ஒரு ஜீன் இருந்தால் மற்ருென்றிலும் ஒரு ஜீன் இருக்கும். ஆதலால் இந்தச் சுயமான வெள்ளே அந்தி மல்லிகையில் நிறத்திற்குக் காரணமான ஜீன்கள் ஏதாவது குறிப் பிட்ட ஒரு ஜோடி நிறக்கோல்களில் ஒவ்வொன்றிலும் ஒன்று வீதம் மொத்தமாக இாண்டு ஜீன்கள் இருக்கு மென்று நாம் அறியலாம். வெள்ளே நிறத்திற்குக் காரண மான ஜீனே வெ என்ற எழுத்தால் சுருக்கமாகக் குறிப் பிட்டால் அவை இரண்டையும் வெவெ என்று எழுதிக் காட்டலாம். இதே மாதிரி சுயச் சிவப்புப் பூப் பூக்கும் அந்தி மல்லிகையில் உள்ள நிற ஜீன்களே சிசி என்று எழுதிக் காட்ட்லாம். கலப்பினச் சேர்க்கையில் அவை எவ்வாறு அமைகின்றன என்று இனிக் கவனிப்போம். விந்தனுவும் அண்டமும் முதிர்ச்சி யடைந்து கருவுண் டாவதற்குத் தகுதியடைகின்ற காலத்தில் அவைகள் ஒவ் வொன்றிலும் முதிர்ச்சி பெருத அணுவிலிருந்த கிறக் கோல்களில் பாதிதான் இருக்கு மென்றும், அப்பாகியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/49&oldid=820440" இலிருந்து மீள்விக்கப்பட்டது