பக்கம்:பாரம்பரியம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறத் தோற்றம் 39 னது ஒவ்வொரு ஜோடியிலிருந்தும் ஒவ்வொன்முக வந்து அமைந்தது என்றும் முன்பே கண்டிருக்கிருேம். ஆதலால் அந்தி மல்லிகையின் உயிரணுவில் வெள்ளை அல்லது சிவப்பு நிறத்திற்கான ஜீன் எது இருந்தாலும் முதிர்ச்சி பெற்ற விந்தணுவிலோ அல்லது அண்டக்கிலோ ஒவ்வொன்று தானிருக்கும். அவை சேரும்போது வெண்சிவப்பு நிறம் எற் படுகிறது. இதைக் கீழ்க் கண்ட படம் நன்கு காட்டுகிறது. வெள்ளை அந்திமல்லிகையின் சிவப்பு அந்திமல்லிகையின் உயிரணு உயிரணு வெவெ முதிராத அணு இ.இ வெ முதிர்ச்சி பெற்ற அணு இ དེ།། ്പ སེ།། 〉། வெசி படம் 18. அவற்றின் சேர்க்கையால் உண்டான பூ வெண் சிவப்புப் பூவுள்ள அங்கி மல்லிகையின் கிறக் கோல்களில் ஒரே உருவமுள்ள ஒரு ஜோடியில் பழைய படி நிறத்திற்கான ஜீன்கள் இரண்டு இருக்கும். ஆனல் அவைகளில் ஒன்றில் இருப்பது வெள்ளை நிறத்திற்கான ஜீன் ; மற்ருென்றில் இருப்பது சிவப்பு நிறத்திற்கான ஜீன். ஆகவே வெண் சிவப்பு அந்த மல்லிகைகள் தமக் குள்ளே ஒரே இனச் சேர்க்கை யாகும்போது என்ன வாகும் என்று கவனிப்போம். அவற்றின் உயிரணுக்களில் கருவுண்டாகக் காரணமான அணுக்கள் முதிரும்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/50&oldid=820442" இலிருந்து மீள்விக்கப்பட்டது