பக்கம்:பாரம்பரியம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பாரம்பரியம் தவர்களின் குழந்தைகள் அறிவு நுட்பம் உடையவர்களாக இருப்பதற்கு வேண்டிய சாகனங்கள் பிறவியிலேயே அமை கின்றன. பெற்ருேர்களின் அறிவுத் திறமை நன்கு தெரிந் கிருந்தாலும் அகிலிருந்து அவர்களுடைய குழந்தைகளின் அறிவுக் கிறமையை அளவிட்டுக் கூற முடியாது; அவர்கள் சாதாரண அறிவுடையோராகவும் இருக்கலாம். இந்த இடத்திலே ஒரு முக்கியமான விஷயத்தை நாம் மனதில் வைத்துக் கொள்ளவேண்டும். நமது சமூகத்தின் இன்றைய கிலையிலே சிலருக்குக் கல்வியின் மூலம் தங்களுக் குள்ள அறிவையும் திறமைகளையும் மலரச் செய்து கொள் வதற்கு வேண்டிய வசதி கிடைப்பதில்லை. அதனல் அவர் களுக்கு இயல்பாயமைந்துள்ள தன்மைகள் மறைந்து கிடக் கின்றன. அவர்களில் யார் சிறந்த மதிநுட்பமுடையவராக முடியும் என்பதும், யார் சிறந்த கலைஞனுக முடியும் என்ப தும் தெரியாமலே போய் விடுகின்றது. அவர்களுடைய குழந்தைகளும் அதே நிலையில் இருக்கிருர்கள். அவர்கள் வாழ்க்கையில் மேற்கெர்ண்டுள்ள காரியங்கள் சிலவற்றில் தமது கிறமைகளே ஒாளவு காட்ட முடியுமே யல்லாது அவற்றின் முழுப் பொலிவையும் வெளிப்படுத்த முடியாது. ஸ்டார்ச் (Starch) என்பவர் கூறிய வாசகம் இந்த இடத் கில் மிகப் பொருத்தமுடையது. ஆஸ்திரேலிய அநாகரி கர்களான வேடர்களின் இடையேகியூட்டன்பிறந்திருந்தால் அவன் ஒரு நல்ல வேடகை அதாவது வேட்டையாடுவதில் கெட்டிக்காானகத்தான் இருந்திருப்பான்; உலகம் புகழும் விஞ்ஞானியாக இருந்திருக்க முடியாது. நாகரிகம் வாய்ந்த சமூகத்தில் பிறந்ததால் நியூட்டனுக்குக் கிடைத்த சந்தர்ப் பங்களும், அனுபவங்களும், பயிற்சியும் அநாகரிமான பழங் குடி மக்களிடையே தோன்றியிருந்தால் அவனுக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/75&oldid=820470" இலிருந்து மீள்விக்கப்பட்டது