பக்கம்:பாரம்பரியம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரம்பரியமும் சூழ்நிலையும் 6? கின்றன. அவையே பாரம்பரியத் தன்மையையும் வழி வழிக் கொண்டு செல்கின்றன. ஆகவே சோமாவும், அதல்ை உண்டான உடலுறுப்புகளும், சாப்பிகளும் சூழ் கிலேயோடு சேர்ந்தவை என்று கூறுவதில் தவறில்லை. நமது தேகத்திலே பல சுரப்பிகள் இருக்கின்றன. அவைகள் சுரக்கும் நீர்கள் குறைந்தாலும், அதிகரித்தா லும் அவற்றிற்கு ஏற்ப உடல் வளர்ச்சியும், தன்மைகளும் மாறுபட்டு அமைகின்றன. ஒரு சில சுரப்பிகள் சரியான படி வேலை செய்யாவிடில் அவற்றைச் சரிப்படுத்துவதற்கு இன்று வழி கண்டு பிடித்திருக்கிருர்கள். உதாரணமாகக் கேடயச் சுரப்பியின் வேலையை அயோடின் துரிதப் படுத்து கின்றது. இம்மாதிரியாகச் சுரப்பிகளின் சக்தியை அதி கரிக்கச் செய்தாலும், இயல்பாக அவற்றிற்குள்ள சக்தி பாரம்பரியத்தைப் பொறுத்ததேயாகும். மேலே விளக்கியுள்ள சூழ்நிலையும் ஒவ்வொருவ ருடைய வாழ்க்கையில் அதிமுக்கியமானதுதான். அதனல் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன். சீதோஷ்ண ேெலமை கூட நம்மைப் பாதிக்கின்றது. சாதாரணமாக ஈக்களுக்கு மூன்று ஜோடிக் கால்களே உண்டு. ஆனல் அவற்றை மிகக் குளிர்ந்த பிரதேசத்தில் வளர்த்தால் அவற்றிற்கு ஆறு ஜோடிக் கால்கள் உண்டாகின்றன. ஹிமாலய முயல்கள் வெண்மையான சோமமுடையவை. ஆளுல் அவற்றை மிகக் குளிரான பிரதேசத்தில் வளர்த்தால் உரோ மம் கறுப்பாக மாறிவிடுகிறது. சீன தேசத்திலுண்டாகும் பரிமூலம் (Primula) என்ற செடியில் வெவ்வேறு கிற முள்ள பூக்களைப் பூக்கும் பல வகைகள் உண்டு, அவற்றில் சிவப்புகிறப் பூக்களையுடைய செடியை 55 முதல் 65° பாான் ஹீட் வரை உஷ்ணமுள்ள இடத்தில் வளர்த்தால் சிவப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/78&oldid=820473" இலிருந்து மீள்விக்கப்பட்டது