பக்கம்:பாரம்பரியம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜீன் சடிதி மாற்றம் ஒரு குடியானவன் தனது சமையலறைக்குப் பின் புறத்திலே ஒரு பீச் (Peach) கன்று தற்செயலாக முளைத்திருப்பதைப் பார்த்தான். அவனுக்கு அதன்மேல் பிரியம் வந்து விட்டது. ஜாக்கிரதையாக அதை வளர்க்க ஆாம்பித்தான். அது வளர்ந்து பூத்துக் காய்த்துப் பழுத் தது. என்ன ஆச்சரியம் அந்தப் பழம் அதே இனத்தைச் சேர்ந்த மற்ற மாங்களின் பழங்களைப் போலல்லாமல் ஆழ்ந்த கிறமும், அதிக ருசியும் கொண்டிருந்தன. அதனல் அந்த அமெரிக்கக் குடியானவன் அப்பீச் மாத்திலிருந்து பல கன்றுகள் உண்டாக்கினன். அவை யெல்லாம் தாய்ச் செடியைப் போலவே நல்ல பழங்களைத் தந்தன. லென்டன் நியூமன் என்ற மற்றெரு அமெரிக்க இளை ஞன் தன் தந்தையுடன் ரோஜாச் செடி வளர்ப்பதில் ஈடு பட்டிருந்தான். சீனவிலிருந்து வந்த ஒரு வகை ரோஜாக் செடியுடன் வேருெரு வகை ரோஜாச் செடியை ஒட்டிப் புதிய செடி ஒன்றை அவன் உண்டாக்கினன். ஒரு நாள் அவன் ாோஜா மலர்களைப் பறித்துக் கொண்டிருக்கும் போது ஒரு செடியில் மட்டும் முள்ளே இல்லாமலிருப் பதைக் கவனித்தான். அதிலிருந்து 26 பதியங்கள் வைத் தான். அவை ஒன்றில்கூட முள்ளே கிடையாது சாதா ாணமாக எந்த ரோஜாச் செடியிலும் முள்ளிருக்க இந்தப் புதிய வகையில் முள்ளிருக்கவில்லை. இம்மாதிரி இயற்கையில் ஏற்படுகின்ற மாறுதல் களெல்லாம் ஜீன் சடிகி மாற்றத்தைப் பொறுத்தே இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/86&oldid=820482" இலிருந்து மீள்விக்கப்பட்டது