பக்கம்:பாரம்பரியம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பாரம்பரியம் கின்றன. அது எப்படி உண்டாகிறதென்று சொல்ல முடியாவிட்டாலும் இம்மாறுபாட்டால்தான் நாம் இன்று வளர்த்துவரும் பல செடிகளும், மிருகங்களும் தோன்றி யுள்ளனs ஈக்கள் வெகு விரைவாக வம்ச் விருத்தி செய்கின்றன வென்றும், அதனல் அவற்றைக் கொண்டு ஆராய்ச்சி செய்வது எளிதென்றும் முன்பே கண்டிருக்கிருேம். ஒரு ஜோடி ஈக்களே ஒன்றிாண்டு ஆண்டுகளுக்கு வளர்த்து வங் தால் பல தலைமுறைகளைச் சேர்ந்த புதிய ஈக்களைப் பார்த்து விடலாம். அப்படி வளர்க்கும்போது உடலமைப்பில் மாறு பட்ட புதிய ஈக்கள் தோன்றியதைக் கண்டிருக்கிருர்கள். சிவப்பான கண்களுக்குப் பதிலாக வெள்ளே நிறமுள்ள கண்களையுடைய ஈக்கள் பிறக்கின்றன; இறகே இல்லாத ஈக்கள் தோன்றுகின்றன. இவ்வாறு தோன்றுவதற்கு ஜீன் சடிதி மாற்றமே கார்ணமாகும். இம்மாறுபாடு எப் பொழுது, எப்படி உண்டாகிற தென்று சொல்ல முடியாது. ஜீன்கள் மிக மிக நுண்ணியவை. அவை களில் ஏதாவதொன்றில் மட்டும் மாறுபாட்டை உண்டாக் கும் காரணமும் மிக மிக நுட்பமானதாகக் கான் இருக்க வேண்டும். அதை கிர்ணயிப்பது அரியதான காரியம். ஜீன் சடிகி மாற்றமானது விந்தணு அல்லது அண்டத் தில்தான் உண்டாக வேண்டு மென்பதில்லை. அது எந்த அணுவிலும் உண்டாகலாம். ஆனல் வேறு அணுக்களில் உண்டாகும் ஜீன் சடிகி மாற்றத்தால் அடுத்த தலைமுறையில் வரும் சந்ததிகள் பாதிக்கப்படா. வழிவழியாக இம் மாறுபாடு தொடருவதற்கு விந்தணுவிலோ அல்லது அண் டத்திலோ தான் அது உண்டாக வேண்டும். ஜீன் சடிகி மாற்றம் கிரந்தரமாக இருந்தால்தான் புதிய வருக்கம் தோன்றும். சில சமயங்களிலே இது நிலைத்திார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/87&oldid=820483" இலிருந்து மீள்விக்கப்பட்டது